Nayanthara: குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. கியூட் என கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டில் பிரம்மாண்டமான அளவில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு வாடகைத்தான் முறையில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு விஷயத்தையும் தங்களுடைய குழந்தைகளுடன் கொண்டாடி ருகிறது இந்த ஜோடி. இந்நிலையில் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையும் இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அனைவரும் சிவப்பு நிற தீமில் உடைகளை அணிந்துள்ளது பார்ப்பவர்களை அதிகமாக ரசிக்க வைத்துள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியானது. படத்தின் கான்செப்ட் சிறப்பாக அமைந்த போதிலும் படத்தின் மேக்கிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் படத்திற்கான பிரமோஷன்கள் சிறப்பாக இல்லை என்றும் கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீசிற்கு பிறகு நயன்தாரா மற்றும் ஜெய் இருவரும் பிரமோஷன்களில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களுக்கு பிரியாணி பரிமாறியது இந்த ரீல் ஜோடி. தொடர்ந்து பல பேட்டிகளையும் கொடுத்தனர்.

Actress Nayanthara celebrates christmas with her family

நடிகை நயன்தாரா: நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி மாஸ் காட்டி வருகின்றன. ஜவான், இறைவன் என அடுத்தடுத்த படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியான நிலையில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. பாலிவுட்டில் இநத்ப் படம் மூலம் நயன்தாரா என்ட்ரி ஆகியுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்திருந்த இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அன்னபூரணி படம்: இந்தப் படங்களை தொடர்ந்து நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்திருந்த அன்னபூரணி படம் வெளியானது. சமையலை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. படத்தில் நயன்தாராவுடன் ஜெய் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் படத்தில் சத்யராஜ், சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், ரசிகர்களை அதிகமாக கவர இந்தப்படம் தவறியது. இந்தப் படத்திற்கு போதிய பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரமோஷன்களில் பங்கேற்காத நயன்தாரா, ஜெய் இந்தப் படத்திற்காக பிரமோஷன்களை மேற்கொண்டனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது கிறிஸ்துமசை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன், மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இதன் கலர்புல் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்களில் அனைவரும் ஒரே மாதிரி சிவப்பு நிற உடைகளில் கலர்புல்லாக காணப்படுகின்றனர். மேலும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை நம்புபவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளனர். கடவுளை நம்பினால் அனைத்தும் வசப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் நயன்தாரா 10 கோடிகளுக்கும் அதிகமான சம்பளம் பெற்று வருவத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நயன்தாரா. தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் மற்றும் குழந்தைகளுடன் தான் இருக்கும்படியான புகைப்படங்கள் வீடியோக்களை இவர் பகிர்ந்து வருகிறார். மேலும் தன்னுடைய பிசினஸ் சம்பந்தமான புகைப்படங்களையும் விளம்பரங்களையும்கூட இவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X