காதலருடன் சேர்ந்து அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலருடன் சேர்ந்து தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் கலக்கி வருகிறார். தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக உள்ள நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடி

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடி

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அதுமட்டுமின்றி அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

சிம்புவுடன் மலர்ந்த காதல்

சிம்புவுடன் மலர்ந்த காதல்

மேலும் காட் ஃபாதர் என்ற தெலுங்கு படத்திலும் கோல்டு என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கி காதல் தோல்விகளையும் சந்தித்துள்ளார். நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.

பிரபு தேவாவுடன் காதல்

பிரபு தேவாவுடன் காதல்

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அந்த காதல் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார் நயன்தாரா, அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தார் நயன்தாரா.

அடுத்தவரின் கணவரை திருடுபவர்

அடுத்தவரின் கணவரை திருடுபவர்

ஆனால் பிரபு தேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். பிரபு தேவா நயன்தாராவை திருமணம் செய்தால் உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக தெரிவித்தார் பிரபு தேவாவின் மனைவி. அதோடு நயன்தாராவையும் அடுத்தவரின் கணவரை திருடுபவர் என சரமாரியாக விமர்சித்தார்.

விக்னேஷ் சிவனுடன் காதல்

விக்னேஷ் சிவனுடன் காதல்

இதனால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட நயன்தாரா பிரபு தேவாவை பிரிந்தார். இதனை தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்

லிவ் இன் ரிலேஷன்ஷிப்

இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்ற தகவலை நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் பங்கேற்ற டிவி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அம்மாவின் பிறந்த நாள்

அம்மாவின் பிறந்த நாள்

இதனிடையே நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது தாயின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார நயன்தாரா. தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

ஹேப்பியஸ்ட் பர்த்டே டியரஸ்ட் அம்மா

ஹேப்பியஸ்ட் பர்த்டே டியரஸ்ட் அம்மா

அந்த போட்டோக்கள் வழக்கமாக வெளியிடப்படும் நயன்தாரா பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோவுக்கு ஹேப்பியஸ்ட் பர்த்டே டியரஸ்ட் அம்மா.. கடவுளின் ஆசீர்வாதம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்சன்கள் நயன்தாராவின் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வருங்கால மாமியாருக்கு வாழ்த்து

வருங்கால மாமியாருக்கு வாழ்த்து

இதேபோல் நடிகர் விக்னேஷ் சிவனும் தனது வருங்கால மாமியாரான நயன்தாராவின் அம்மா ஓமன குரியன் அம்முவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவையும் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் ஓமன குரியன் அம்மு மீது கையை போட்டிருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

கொடுத்து வைத்தவர் நீங்கள்

கொடுத்து வைத்தவர் நீங்கள்

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வைத்தவர் நீங்கள் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் அடிக்கடி நயன்தாராவின் போட்டோக்களை அப்லோட் செய்யுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர். நயன்தாரா தனது காதலருடன் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X