தலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாராவின் ரோல் இதானாம்.. அதுவும் முதல்முறையாக.. செம குஷியில் ஃபேன்ஸ்!

Recommended Video

Amala Paul Web Series | Urvashi in Amazon Filmfare Function | Heroine Round Up

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாரவின் கதாப்பாத்திரம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்த்தின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ரஜினிகாந்த்தின் மற்றப்படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

அதிகாரப்பூர் அறிவிப்பு

அதிகாரப்பூர் அறிவிப்பு

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முதல்முறை

முதல்முறை

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தலைவர் 168 படத்தில் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் நயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையானால் அந்த கேரக்டரில் அவர் நடிப்பது இது முதல்முறையாக இருக்கும்.

குஷ்பு எதிரி

குஷ்பு எதிரி

முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து வருவதாக தகவல் வெளியானது. நடிகை குஷ்பு நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக இருந்து பின்னர் எதிரியாக மாறி பழிவாங்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு இரண்டு மனைவிகள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

பிரபல நடிகர்

பிரபல நடிகர்

இதேபோல் படத்தின் பெயர் இதுவாக இருக்கலாம் என்று வியூகம், மன்னவன், அண்ணாத்த ஆகிய பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X