Nayanthara: மண்ணாங்கட்டி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த நயன்தாரா.. விரைவில் டீசர்!

சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், அஜித், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தயாரிப்பிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே அடுத்தடுத்து புதிய பிசினஸ்களையும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து துவங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு பூஜையுடன் துவங்கிய மண்ணாங்கட்டி Since 1960 படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதை பார்க்க முடிந்தது.

Actress Nayandhara completes the shooting of Mannangatti movie shooting

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தொடர்ந்து இருபது ஆண்டுகளை கடந்து ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நயன்தாரா நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட கதைகளிலும் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் ரிலீசான சூழலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்தது.

Actress Nayandhara completes the shooting of Mannangatti movie shooting

பாலிவுட்டில் நயன்தாரா: இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவிற்கு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மண்ணாங்கட்டி Since 1960 என்ற படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருடன் நயன்தாரா இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Actress Nayandhara completes the shooting of Mannangatti movie shooting

மீண்டும் யோகிபாபுவுடன் இணைந்த நயன்தாரா: இவர்கள் இருவரும் கோலமாவு கோகிலா என்ற படத்தில் இணைந்து நடித்தது ரசிகர்களை கவர்ந்த சூழலில், தற்போது மீண்டும் மண்ணாங்கட்டி படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சூழலில் டியூட் விக்கி இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்ட சூழலில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Nayandhara completes the shooting of Mannangatti movie shooting

மண்ணாங்கட்டி பட சூட்டிங் நிறைவு: முன்னதாக படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் படமாகவே மண்ணாங்கட்டி since 1960 படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இதுபோல நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீசானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவர தவறவிட்டது. இந்நிலையில் மண்ணாங்கட்டி படம் நயன்தாராவிற்கு கை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X