டைம் மிஷின் கிடைத்தால்.. டிவி நிகழ்ச்சியில் கதறியழுத நயன்தாரா.. கலங்க வைக்கும் புரமோ!

சென்னை: டிவி நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கண்ணீர் விட்டு கதறியழும் புரமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். மலையாள மொழியில் 2003ஆம் ஆண்டு வெளியான மனசினக்கரே படத்தின் மூலம் அறிமுகமானார்.

8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்

தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் நடித்த நயன்தாரா, 2005ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழில் அறிமுகமானார் நயன்தாரா. தொடர்ந்து 2006ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லக்ஷ்மி படத்தில் நடித்தார் நயன்தாரா. இதன்மூலம் தெலுங்கு சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

டாப் நடிகர்களுடன் ஜோடி - அதிக சம்பளம்

டாப் நடிகர்களுடன் ஜோடி - அதிக சம்பளம்

தொடர்ந்து பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.

பிரபு தேவாவின் மனைவி நயன்தாராவுக்கு எதிர்ப்பு

பிரபு தேவாவின் மனைவி நயன்தாராவுக்கு எதிர்ப்பு

அதன் பிறகும் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் பிரபு தேவாவின் மனைவி அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அப்போது பல்வேறு மகளிர் அமைப்புகள் நயன்தாரா குடும்பத்தை பிரிப்பதாக கூறி அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.

பிரபு தேவாவை பிரிந்த நடிகை நயன்தாரா

பிரபு தேவாவை பிரிந்த நடிகை நயன்தாரா

இதனை தொடர்ந்து பிரபு தேவாவை பிரிந்தார் நடிகை நயன்தாரா. இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கிறிஸ்தவ பெண்ணான நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்காக இந்துவாக மாறினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பு

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பு

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்திருக்கும் போட்டோ அண்மையில் வெளியானது. இதனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சில் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது.

நிச்சயம் முடிந்தது - ரகசியத்தை உடைத்த நயன்

நிச்சயம் முடிந்தது - ரகசியத்தை உடைத்த நயன்

நேற்று வெளியான புரமோவில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறினார் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனிடம் எல்லாமே பிடிக்கும் ஆனால் பிடிக்காத விஷயங்களும் உள்ளது என்றும் கூறினார். அதனை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என கேட்டு வருகின்றனர்.

டைம் மிஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

டைம் மிஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மேலும் ஒரு புரமோ வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியின் தொகுப்பாளரான டிடி நயன்தாராவிடம் உங்களுக்கு டைம் மிஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் நயன்தாரா, தனது அப்பாதான் தனக்கு ஹீரோ, தன்னுடைய ரோல் மாடல் அவர்தான் என்று கூறுகிறார்.

கண்ணீர் விட்டு கதறி அழுத நயன்தாரா

கண்ணீர் விட்டு கதறி அழுத நயன்தாரா

மேலும் கடந்த சில நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரால் நடமாட முடியவில்லை என்று குரல் தழுதழுத்த குரலில் கூறிய நயன்தாரா, பேச முடியாமல் திணறினார். பின்னர் தனக்கு டைம் மிஷின் கிடைத்தால் தனது அப்பாவை பழையப்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் மாற்றிக்கொள்வேன் என கூறி கண்ணீர் விட்டார்.

விரைவில் நலம் பெற்று விடுவார்

விரைவில் நலம் பெற்று விடுவார்

நயன்தாராவின் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் கலங்கியுள்ளனர். தனது தந்தை குறித்து நயன்தாரா உருக்கமாக பேசியதை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற்று விடுவார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தந்தைக்கு திடீர் மூச்சு திணறல்

தந்தைக்கு திடீர் மூச்சு திணறல்

கடந்த மாதம் நயன்தாராவின் தந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தனது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலை அறிந்ததும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடனடியாக கேரளா சென்றனர். நயன்தாராவின் சகோதரருக்கும் தந்தையின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரும் உடனடியாக கேரளா திரும்பினார்.

Recommended Video

அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதா? தொழிலை பார்ப்பதா? குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
5 படங்கள் கைவசம்

5 படங்கள் கைவசம்

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஆரடுகுல புல்லட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X