Nayanthara: பிரபல ஹீரோவிற்கு அக்கா.. நயன்தாரா -விக்னேஷ் சிவனின் வேற லெவல் பிளான்!
சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட்டில் நயன்தாராவின் ஜவான் படம் வெளியானது. ஷாருக்கானுடன் நயன்தாரா இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் தமிழிலும் அடுத்தடுத்து இறைவன், அன்னபூரணி படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ளன.
நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளை கடந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் இறைவன், அன்னபூரணி படங்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் என்ட்ரி: முன்னதாக பாலிவுட்டிலும் நயன்தாரா தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். தன்னுடைய அறிமுக படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அட்லீ இயக்கியுள்ள நிலையில் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் சில தினங்களிலேயே இணைந்தது. இதையடுத்து பாலிவுட்டில் நயன்தாராவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அன்னபூரணியாக நயன்தாரா: ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இநத்ப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி நயன்தாரா, ஜெய், சத்யராஜ் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அன்னபூரணி படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சரியான பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால் படம் அதிகப்படியான ரசிகர்களை ரீச் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்காவாக நடிக்கும் நயன்தாரா: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. இதனிடையே, அடுத்ததாக தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நயன்தாரா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில், அவருக்கு அக்காவாக நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதீப் -விக்னேஷ் சிவன் காம்பினேஷன்: முன்னதாக அஜித் படத்தில் கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில், தறபோது பிரதீப் ரங்கநாதனை லீட் கேரக்டரில் வைத்து படமியக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் நயன்தாராவும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு LIC -லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் இளம் நடிகை நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











