Actress Nayanthara: பேட்டரி காரில் ஏறிய நயன்தாரா.. கலைஞர் 100 விழாவில் நயனை கடுப்படித்த சம்பவம்!

சென்னை: கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். எந்த பட பிரமோஷனுக்கும் விழாவிற்கும் செல்லாத நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியது.

கருப்பு நிற காரில், கருப்பு நிற புடவையில் நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பங்கேற்றார். அனைவரையும் கவரும்வகையில் அவரது கெட்டப் இருந்தது. நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மேடையேறி பேசிய நிலையில் நயன்தாரொ அதை செய்யவில்லை. இந்த விஷயமும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதிவரை அமர்ந்து அனைத்தையும் பொறுமையாக நயன்தாரா ரசித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் நயன்தாரா பங்கேற்றுள்ளார்.

Actress Nayanthara got angry in Kalaigner 100 event

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். மேலும் தன்னுடைய கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக நடித்துவரும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஜவான் படம் வெளியானது. ஷாருக்கானுடன் இந்தப் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் அவர் பாலிவுட்டிலும் நடிகையாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

கலைஞர் 100 விழாவில் நயன்தாரா: தன்னுடைய படங்களின் பிரமோஷன்களில் மட்டுமில்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற பாலிசியை தொடர்ந்து நயன்தாரா கடைப்பிடித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் அன்னபூரணி படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். ஜவான் தவிர்த்து அவரது சமீபத்திய படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில் அவர் தன்னுடைய பாலிசியை தளர்த்திக் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார்.

கடுப்பான நயன்தாரா: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கருப்பு நிற காரில், கருப்பு நிற உடையில் கலக்கலாக பங்கேற்றார். அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் நயன்தாரா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கார் பார்க்கிங்கில் இருந்து மேடை வரை செல்வதற்கு பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா பேட்டரி காரில் சென்றபோது நடந்த சம்பவம் அவரை கடுப்பிற்குள்ளாக்கியுள்ளது.

நயன்தாரா சமாதானம்: பேட்டரி காரில் நயன்தாரா ஏறிய நிலையில் அவரது பௌன்சர்களை ஏற்ற முடியவில்லை. இதனால் நயன்தாரா மிகவும் டென்ஷனானார். தொடர்ந்து அவரது கார் தாமதமாக புறப்பட்டதும் அவரது டென்ஷனுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் சோனியா அகர்வால் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டு சென்றது. பௌன்சர்களும் பேட்டரி காரில் ஏற்றப்பட்ட பின்பே நயன்தாரா சமாதானமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X