Nayanthara: வதந்திக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா வெளியிட்ட முக்கிய போட்டோ!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்திருந்தார். அவரின் இந்த செயல் இணையத்தில் பெரும் வைரலாகி இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவின. இதற்கு நடிகை நயன்தாரா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன், சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்து முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், விஜய்சேதுபதி என பல திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.

Actress Nayanthara has released a photo to put an end to divorce rumours

நயன்தாரா: அண்மையில், நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்திருந்தார். அவரின் இந்த செயல் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பிரியப்போகிறார்கள் என்று இணையத்தில் செய்திகளை வெளியிட தொடங்கிவிட்டனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவும் நெருக்கமாக இசையைக் கேட்டு ரசிக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

பிரிந்துவிட்டார்களா?: விக்னேஷ் சிவனின் பதிவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைந்த நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ம்ம், நான் தொலைந்துவிட்டேன்.. என்று பதிவிட்டிருந்தார். அதேபோல், கண்களில் கண்ணீருடன் கூட, எனக்கு இது கிடைத்தது என்று வெளியிட்டிருந்தார். நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்னையா என்று கேட்டு வந்தனர்.

Actress Nayanthara has released a photo to put an end to divorce rumours

வதந்திக்கு முற்றுப்புள்ளி: நயன்தாரா தனது கணவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார், இது டெக்னிக்கல் பிரச்சினையால் சிலருடைய ஃபாலோயர்களின் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்கியின் பெயர் உள்ளதும் தெரியவந்துள்ளது. இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது எக்ஸ் தள பக்கத்தில், கணவர் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X