Nayanthara: செல்ஃபிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. நயன்தாரா என்ன செஞ்சாங்க தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் என தன்னை மிகவும் என்கேஜாக வைத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. மண்ணாங்கட்டி என்ற படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நயன்தாரா அடுத்ததாக கவினுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2003ம் ஆண்டில் மலையாளத்தில் மன்சின்னகரே என்ற படம் மூலம் அறிமுகமான இவர், 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடைபோட்டு வருகிறார். சினிமாவிலேயே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயும் ஆகியுள்ளார்.

nayanthara mumbai

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மட்டுமில்லாமல், இந்தியிலும் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்த ஜவான் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. தொடர்ந்து நயன்தாரா பாலிவுட்டில் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அடுத்ததாக கவினுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் தன்னுடைய கணவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் நயன்தாரா.

மும்பையில் நயன்தாரா: இவை மட்டுமில்லாமல் அழகு சாதன பொருட்களுக்கான பிசினசையும் மேற்கொண்டு வருகிறார். 9 என்ற சொந்த பிராண்டை சமீபத்தில் உருவாக்கியுள்ள நயன்தாரா, இந்த பிசினசை விரிவுப்படுததும் வகையில் அடுத்தடுத்த விஷயங்களை செய்து வருகிறார். இன்றைய தினம் மும்பையில் இந்த பிராண்டின் பிரமோஷனை மேற்கொண்டார். இதன்போது அழகான டிரஸ்ஸுடன் நயன்தாரா மேடையில் நடைபோட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய டயட் காரணமாகவே தன்னுடைய முகம் மாறுதலாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

nayanthara mumbai

நயன்தாரா விளக்கம்: தன்னுடைய கன்னத்தை கிள்ளினாலும் எரித்தாலும் அதில் பிளாஸ்டிக் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. டயட் மூலமாகவே நயன்தாரா தன்னுடைய உடலை பராமரிப்பது குறித்த சீக்ரெட் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் பிரமோஷனில் ஈடுபட்ட நயன்தாரா மேடையில் இருந்தபோது கீழே இருந்த ரசிகைகள் அவருடன் செல்ஃபி எடுக்க நீண்ட நேரங்களாக காத்திருந்தனர். இதை பார்த்த நயன்தாரா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி அவர்களை மேடைக்கு வரவழைத்தார். இதையடுத்து அவர்களுடன் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

நயன்தாராவுடன் செல்ஃபி: பிரமோஷனுக்காக அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோதிலும், தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களை பார்த்து அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார் நயன்தாரா. அவரது இந்த செயல், இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன்தாரா, திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபிறகும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் அடுத்ததாக யஷ்ஷுடன் இணைந்து டாக்சிக் என்ற படத்திலும் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

nayanthara mumbai

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X