Actress Nayanthara: படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நயன்தாரா?.. த்ரிஷாவை தொடர்ந்து அதிரடி?

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. திருமணம் ஆகி வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கோலிவுட்டில் கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் ஜவான், இறைவன் மற்றும் அன்னப்பூரணி படங்கள் வெளியாகின. இதில் ஜவான் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார் நயன்தாரா. இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் பாலிவுட்டில் நயன்தாரா கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தயாரிப்பாளராகவும் தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அடுத்தடுத்த பிசினஸ்களையும் அறிவித்து செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தன்னுடைய கணவர், குழந்தைகள், படங்கள், பிசினஸ் என நிற்கக்கூட நேரமில்லாமல் செயல்பட்டு வருகிறார் நயன்தாரா.

Actress Nayanthara increased her salary in her next movie it seems

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா ஐயா படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி, ஏராளமான ரசிகர்களை முதல் படத்திலேயே கட்டிப்போட்டார். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தபோதிலும் இன்னமும் நாயகியாகவே நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த நயன்தாரா, கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் மூலம் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும் களமிறங்கினார். அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்தது.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்தப் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அடுத்தடுத்த படங்களில கமிட்டாகி நடித்துவருகிறார் நயன்தாரா. தற்போது டெஸ்ட் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து எல்ஐசி, மண்ணாங்கட்டி, நயன்தாரா 81, தனிஒருவன் 2 படங்களில் நடிக்கவுள்ளார். திருமணமாகி வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அவரது அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையிலும் அவரை அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்ய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அறிமுக இயக்குநருடன் கூட்டணி: அடுத்ததாக யானை, காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படங்களை தயாரித்துள்ள ட்ரம்ஸ்டிக் நிறுவனம் நயன்தாராவை அடுத்தப்படத்திற்கு கமிட் செய்துள்ளது. செந்தில் என்ற குறும்பட இயக்குநர் இயக்கவுள்ள இந்தப் படத்தில் தன்னுடைய சம்பளத்தை நயன்தாரா கணிசமாக உயர்த்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய முந்தைய படங்களில் 9 முதல் 10 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றுவந்த நயன்தாரா, இந்தப் படத்தில் தன்னுடைய சம்பளத்தை 11 கோடிகளாக உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது படங்கள் சரியாக ஓடவில்லை என்றபோதிலும் தன்னுடைய சம்பளத்தில் அவர் கறாராக இருப்பதாக கூறப்படுகிறது.

திரிஷாவை தொடர்ந்து நயன்தாரா: நடிகை திரிஷா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்துவரும் தக் லைஃப் படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை 12 கோடிகளாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நயன்தாராவும் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். இதனால் இவர்களை புக் செய்துவரும் தயாரிப்பாளர்களுக்குத்தான் தலைவலி அதிகமாகியுள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X