Nayanthara: நேசிப்பிற்கும் ஆறுதலுக்கும் ஏங்குகிறோம்.. க்யூட் புடவையில் நயன்தாரா பதிவு!

சென்னை: நடிகை நயன்தாரா விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

தொடர்ந்து குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது இவரது நடிப்பில் மண்ணாகட்டி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவருடன் இணைந்து தயாரிப்பு, அடுத்தடுத்த பிசினஸ் என பிசியாக உள்ளார் நயன்தாரா.

https tamil filmibeat com heroines rashmika-mandanna-character-in-kubera-revealed-with-a-terrific-glimpse-136945 html


நடிகை நயன்தாரா: கோலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் நடிகை நயன்தாரா. விஜய், அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ள நயன்தாரா, அறம் உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா உயிர் மற்றும் உலக் என்ற இரு குழந்தைகளுக்கு வாடகை தாய் முறையில் தாயாகியுள்ளார்.

அடுத்தடுத்த பிசினஸ்: தற்போது தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதில் அதிகமான நேரங்களை செலவழித்து வரும் நயன்தாரா, படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவரது நடிப்பில் மண்ணாங்கட்டி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா, தொடர்ந்து அடுத்தடுத்த பிசினஸ்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த பிசினஸ்களை புரமோட் செய்யும் வகையில் அடுத்தடுத்த விளம்பரங்களையும் ஃபோட்டோஸ்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

க்யூட் போஸ் கொடுத்த நயன்தாரா: இந்நிலையில் டாக்டர் கோமதி என்பவருடன் இணைந்து நயன்தாரா கடந்த ஜனவரியில் பெமி9 பிராண்டில் சானிடரி நேப்கினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வரும் நயன்தாரா பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே பெமி9 நேப்கினை ப்ரோமோட் செய்யும் வகையில் தற்போது அழகான புடவையில் போட்டோ சூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆறுதலும் நேசிப்பும் தேவைப்படும் நேரங்களை குறிப்பிட்டுள்ளார். ரிலாக்ஸ் போஸ்: பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்திப்பதையும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, இந்த நேரத்தில் தான் பெமி9 உபயோகித்து சவுகரியத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காக அவர் இநத பதிவை வெளியிட்டிருந்தாலும் அவரது இந்த விளம்பரத்தை காட்டிலும் புடவையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு அவர் ரிலாக்ஸ் ஆக சாய்ந்த படி கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X