அந்த படத்தை போலவே இதிலும் மோசம் செய்துவிட்டார்.. இயக்குநர் மீது கடும் கோபத்தில் நம்பர் நடிகை!

சென்னை: தர்பார் படத்தால் இயக்குநர் முருகதாஸ் மீது நடிகை நயன்தாரா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

Recommended Video

Darbar Vs Sarkar | Rajini Vs Thalapathy | A.R.Murugadoss | Nayanthara

தர்பார் படத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார் நயன்தாரா. ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருப்பதை போல இந்தப் படத்தில் நயன்தாராவின் அழகும் கிளாமரும் தூக்கலாகவே உள்ளது.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

ஆனால் என்ன.. படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பே இல்லை. சும்மா வந்து செல்கிறார் என நயன்தாராவின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

படங்கள் தேர்வு

படங்கள் தேர்வு

நடிகை நயன்தாரா சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைதான் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் அறம், நானும் ரவுடிதான் உட்பட பல படங்களை தேர்வு செய்து வருகிறார்.

துணை நடிகைகள்

துணை நடிகைகள்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஏன் இப்படி உப்புச்சப்பே இல்லாத படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தில் நயன்தாராவை ஒரு ஹீரோயின் போல் பயன்படுத்தவில்லை என்றும் துணை நடிகையாகதான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

புலம்பும் நடிகை

புலம்பும் நடிகை

ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ்க்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கூட படத்தில் தனக்கு அளிக்கப்படவில்லை என நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் நயன்தாரா.

மோசமான முடிவு

மோசமான முடிவு

ஏற்கனவே கஜினி படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, தன்னை டம்மியாக பயன்படுத்தினார் என குற்றம்சாட்டினார் நயன்தாரா. மேலும் தனது சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த மோசமான முடிவு கஜினி படத்தில் நடித்ததுதான் என்றும் பேட்டி ஒன்றில் கூறினார் நயன்தாரா.

நடிகை கோபம்

நடிகை கோபம்

இந்நிலையில் தர்பார் படத்திலும் தனது கதாப்பாத்திரத்தை முருகதாஸ் வீணாக்கிவிட்டார் என கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா. இதனைக் கேட்ட ரசிகர்கள், அட போம்மா.. முருகதாஸ் ரஜினிகாந்தை வீணாக்கிவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X