பாலிவுட் படத்தால் தாமதித்த நயன்தாரா... தமிழ் படத்தில் இருந்து நீக்கம்.. ஆன்போர்டான மற்றொரு நடிகை!
சென்னை: பாலிவுட் படத்தால் தாமதித்ததால் நடிகை நயன்தாரா ஏற்கனவே ஒப்பந்தமான தமிழ் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ் என டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

காத்து வாக்குல ரெண்டு காதல்
தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

புதிய படத்தில் ஒப்பந்தம்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமான புதிய படம் ஒன்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதாவது, போட்டா போட்டி, தெனாலி ராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார் நயன்தாரா.

கால் ஷீட் பிரச்சனை
இந்நிலையில் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாததால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நயன்தாரா அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நயன்தாராவுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவர் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் காட்சிப்படுத்தியிருந்தனர்.
Recommended Video

நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் ஒப்பந்தம்
ஆனால் இதுவரை நயன்தாரா தேதி கொடுக்காததால் படக்குழு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு உறுதி செய்துள்ளார். மேலும் நயன்தாரவுக்கு பதிலாக நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











