அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தலைவர் 168 குறித்து சன் பிக்ஸர்ஸ் முக்கிய அறிவிப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 168 படம் குறித்து சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

சந்திரமுகியை தொடர்ந்து தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

தலைவர் 168

தலைவர் 168

கடந்த 9ஆம் தேதி வெளியான தர்பார் திரைப்படம் இன்னமும் ஒரு சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படக்குழு

முதற்கட்ட படக்குழு

மேலும் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதோடு காமெடி நடிகர்களாக சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தலைவர் 168 படத்திற்கு அடி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதாவது தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தர்பார் படத்தில் நயன்தாரவின் கதாப்பாத்திரம் அழுத்தமானதாக இல்லை என்று பேச்சு இருந்து வருகிறது.

கரெக்ட்டான ஆளு

இந்நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தகவலை அதிகம் பகிர்ந்து வருவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். வாயா சன்பிக்சரு.. நீதான் இவனுங்கள கதறவிட கரெக்டான ஆளு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

லிஸ்ட்ட கொடுங்க

தலைவரோட நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி...அப்படி என்ன கதை எடுக்கறார் இந்த சிவா? தலைவர் படத்துல ஒரு ஹீரோயினுக்கே வேலை இருக்காதே!? என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். இன்னும் யாரு எல்லாம் இருக்காங்க மொத்தமா ஒரு லிஸ்ட் குடுத்துருங்க தெய்வமே..பாக்க பேமிலி சப்ஜெக்ட்டா இருக்கும் போலயே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நீங்க கலக்குங்க

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்கிறார் இந்த நெட்டிசன். இவர் தலைவா.. சிவா சார் சம்பவம் பெருசா இருக்கும் போலயே,, இன்னும் திரிஷா, ஜோதிகா, சிம்ரன்லாம் கூட ஆட் பண்ணுவீங்களோ.. நீங்க கலக்குங்க.. தலைவர் என்ட்ரிக்காக காத்திருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X