நயன்தாரா ஹனிமூன் போகல தெரியும்.. ஆனா மும்பை போறாங்க.. எதுக்கு தெரியுமா?

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவரும் தற்போது கேரளாவில் நயன்தாராவின் அம்மா வீட்டில் உள்ளனர். இருவரும் ஹனிமூன் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அடுத்ததாக இருவரும் என்ன பணிகளில் ஈடுபட போகின்றனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா காதல்

விக்னேஷ் சிவன் -நயன்தாரா காதல்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப்படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. அதை அணையாமல் தற்போதுவரை மெயின்டெயின் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் அப்டேட்கள்

இன்ஸ்டாகிராம் அப்டேட்கள்

எப்போதுமே விக்னேஷ் சிவன் நயன்தாராவை தங்கமே என்றுதான் கொஞ்சுவார். அவர்தான் இருவரும் செல்லும் இடங்கள் குறித்தும், செல்லும் கோயில்கள், வெளிநாடுகள் என பல்வேறு தகவல்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளிப்படுத்துவார். இதையடுத்து இந்தத் தகவல்களை பார்ப்பதற்காகவே அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

இதேபோல இருவருக்கும் இடையில் திருமணம் நடந்து முடிந்த சில மணிநேரங்களிலேயே அவர் தங்களின் திருமணப் புகைப்படங்களையும் வெளிப்படுத்தினார். முன்னதாக கடந்த 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க திரையுலக பிரபலங்கள் சூழ இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நோ ஹனிமூன்

நோ ஹனிமூன்

இதையடுத்து திருப்பதிக்கு இந்த ஜோடி பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தது. அப்போது செய்தியாளர்கள் அவர்களது ஹனிமூன் குறித்து கேட்டபோது நயன்தாரா வெட்கத்துடன் கூடிய சிரிப்பையே பரிசாக கொடுத்தார். ஆனால் அவர்கள் இருவரும் ஹனிமூன் எதற்கும் பிளான் செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

கேரளாவில் தம்பதி

கேரளாவில் தம்பதி

இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக இந்த திருமணத்தில் நயன்தாராவின் பெற்றோர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது கேரளாவில் நயன்தாராவின் அம்மா வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

கலக்கல் சந்திப்புகள்

கலக்கல் சந்திப்புகள்

தினந்தோறும் அவர்களை சந்தித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சூட்டிங்கில் நயன்தாரா கலந்துக் கொண்டுள்ளார். தற்போது இணையதள விளம்பரம் ஒன்றில் நடித்து வருகிறார் நயன்தாரா.

ஜவான் படத்தில் நயன்தாரா

ஜவான் படத்தில் நயன்தாரா

தொடர்ந்து வரும் 25ம் தேதி மும்பை செல்லும் நயன்தாரா ஷாருக்குடன் ஜவான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கிறார். திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டு சில காட்சிகளில் அவர் நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சூட்டிங்கை தொடரவுள்ளார். ஷாருக்குடனான நயன்தாராவின் காம்பினேஷன் காட்சிகளை அடுத்ததாக எடுக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம்.

Recommended Video

R.K.Suresh speech | விஜய் சேதுபதி உருவத்தில என் அப்பாவை பாக்குறேன்..!!' | Maamanithan Press Meet
ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன்

ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன்

இதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் அஜித்தின் ஏகே62 படத்திற்கான வேலைகளை துவங்கவுள்ளதாகவும் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை திரும்பும் அவர் படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X