அம்சம்ய்யா... கேரளத்து புடவையில்.. தலை நிறைய மல்லிப்பூவுடன்.. சிலிர்க்க வைக்கும் நயன்தாரா!
சென்னை : நயன்தாராவின் விஷூ கொண்டாட்டப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கவிதைபாடி வர்ணித்து வருகின்றனர்.
இணையத்தில் இந்த படம் தாறுமாறாக வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிராமத்து பெண்ணாக
2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. ஒரு கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். கிராமத்தில் கை நீட்டினால் நயன்தாரா போல் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுமளவுக்கு கிராமத்து பெண்ணாக இருந்தார்.

கிளாமரில் கலக்கினார்
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் ரவுண்டு கட்டி நடித்த இவர், தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப்பெண் என்ற பார்வையை உடைத்து எனக்கு கிளாமரும் வரும் என்பதை மெய்பித்தார். வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் அவரை வேறு கோணத்தில் காட்டத்தொடங்கின.

கம்பேக்
இதற்கிடையே காதல் சர்ச்சைகளில் சிக்கி நயன்தாரா பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தன. இதையடுத்து தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட நயன்தாரா, அறம், டோரா, மாயா என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

கேரளா சேலையில்
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் தனி விமானம் மூலம் விஷூ பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளா சென்றிருந்தனர். விமானத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். தற்போது விஷூ கொண்டாட்டப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் நயன்தாரா கேரளா சேலையில் தலை நிறைய மல்லிப்பூ வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை நயன்தாரா மட்டும் தனியாக இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் எங்கே என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











