அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தும் அழகில் நயன்.. ஆனாலும் இப்படி திட்றாங்களே.. என்ன கொடுமை சார்!

சென்னை: ஜீ தமிழ் சினி விருது விழாவில் நடிகை நயன்தாரா அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சினி அவார்ட்ஸ் விருது விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் கமல், தனுஷ், யோகி பாபு என நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். இதேபோல் நடிகை நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், சமந்தா உட்பட ஏராளமான நடிகைகளும் இந்த விருது விழாவில் பங்கேற்றனர்.

அசத்தலாய் பங்கேற்பு

அசத்தலாய் பங்கேற்பு

நடிகை நயன்தாராவுக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் நயன்தாரா, இந்த விருது விழாவில் அசத்தலாய் பங்கேற்றார்.

கொள்ளை கொண்ட நயன்

கொள்ளை கொண்ட நயன்

அரக்கு நிற பட்டுப்புடவையில் கொஞ்சும் அழகில் கொள்ளை கொண்டார் நயன்தாரா. நயன்தாராவை பார்த்ததும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

திட்டும் நெட்டிசன்ஸ்

திட்டும் நெட்டிசன்ஸ்

நயன்தாரா பட்டுப்புடவையில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை புகழ்ந்து வர்ணித்தாலும், சிலர் அவரை கொடூரமாக திட்டி தீர்க்கின்றனர்.

கடையை கட்டும் நயன்

கடையை கட்டும் நயன்

அதாவது நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதில்லை. அது யாராக இருந்தாலும் சரி, விஸ்வாசம், பிகில், தர்பார் என எந்தப்படமாக இருந்தாலும் நடிப்பதோடு சரி தன்வேலை முடிந்துவிட்டதாக கடையை கட்டிவிடுகிறார் நயன்தாரா.

பல்லை இளிச்சுட்டு

இதனை வச்சுதான் நயன்தாராவை விளாசி தள்ளியிருக்கின்றினர் நெட்டிசன்கள். படம் ஆடியோ லாஞ்சுக்கு போக மாட்டீங்க ஆனா விருது கொடுக்குறாங்க என்றதும் பல்லை இளிச்சுட்டு போயிருப்பீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

இது நியாயமா?

படங்களில் நடிப்பதால் தான் உங்களுக்கு விருது கிடைக்கிறது. ஆனால் அந்த படங்களின் புரமோஷன் ஆடியோ லாஞ்சுக்கு வராமல் அந்த படங்களின் மூலம் கிடைக்கும் விருது வாங்க மட்டும் வருகிறீர்களே நியாயமா. என்ன காரணம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

அதுக்கு முடியலையா?

இந்த ஃபங்ஷன்ல்லலாம் எல்லாம் கலந்துக்க முடியுது தலைவர் தர்பார் ஃபங்ஷனுக்கு வர முடியலையா?? மேடம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

அழகா இருக்கீங்க தலைவீ..

அழகா இருக்கீங்க தலைவீ... என்கிறார் இந்த நெட்டிசன்.

அழகு அள்ளுது..

தங்க தலைவி அழகு அள்ளுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X