போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வீட்டின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். அதோடு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வருகிறார் நயன்தாரா.

ஷாருக்கானுக்கு ஜோடி
கோலிவுட் டோலிவுட் என கலக்கி வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அட்லி, பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் கமிட்டாகியுள்ளார் நயன்தாரா.

போயஸ் கார்டனில் புதிய வீடு
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

வீடு கட்டும் தனுஷ்
ஏற்கனவே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் தான் உள்ளார். அவரை தொடர்ந்து அவரது மருமகனான நடிகர் தனுஷும் சென்னை போயஸ் கார்டனில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டுமான பணிகள் முடிந்ததும் தனுஷ் போயஸ் கார்டனுக்கு குடி பெயரவுள்ளார்.

இரண்டு 4BHK வீடுகள்
இந்நிலையில் நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் உள்ள பிரபல அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இரண்டு வீடுகளுமே 4BHK வீடுகள் என்றும் கூறப்பட்டது. அதோடு இந்த வீட்டிற்கு நடிகை நயன்தாரா விரைவில் குடி பெயர உள்ளார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
Recommended Video

எக்மோரில் வசிக்கும் நயன்தாரா
இந்நிலையில் நயன்தாரா வாங்கியுள்ள வீட்டின் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி நயன்தாரா வாங்கியுள்ள ஒரு வீட்டின் விலை 18 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாரா தற்போது எக்மோரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார். புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்ததும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வேலைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











