Nayanthara: அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டும் வரும்.. நயன்தாரா போட்ட பதிவு.. யாருக்கு?

சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 2022ம் ஆண்டில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் மகாபலிபுரத்தையடுத்த ரெசார்ட்டில் நடந்தது.

ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா என திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமணம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது. ஆனால் இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த ஆவணப்படம் வெளியானது. இந்தப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி மறுத்ததாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.

nayanthara dhanush vignesh shivan

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளை கடந்து வலம்வந்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் ஜவான் படம் பாலிவுட்டில் ரிலீசானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. தமிழிலும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் மாஸ் காட்டி வரும் நயன்தாரா, அடுத்தடுத்த பிசினசிலும் தன்னை இணைத்து வருகிறார். இதன் பிரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

நயன்தாரா ஆவணப்படம்: இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார் நயன்தாரா. இவர்களது திருமணம் மகாபலிபுரத்தையடுத்த ரெசார்ட் ஒன்றில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்திய அளவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த திருமணம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் இதற்காக நெட்பிளிக்சுடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அப்போதே பேசப்பட்டது. ஆனால் இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த ஆவணப்படம் ஓடிடியில் வெளியானது.

நயன்தாரா கோபம்: இந்த ஆவணப்பட ரிலீஸ் தாமதமானதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடைய ஆவணப்படத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா பொங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக நடிகைகள் பார்வதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் தற்போது விவாகரத்தாகியுள்ளது.

நயன்தாரா சூசகப்பதிவு: இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா புதிய பதிவொன்றை போட்டுள்ளார். அதில் கர்மா குறித்து அவர் பதிவிட்டுள்ளார். கர்மா கூறுவது என்னவென்றால், பொய்களை கூறி மற்றவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைத்தால் அது அசலும் வட்டியுமாக மீண்டும் உங்களிடம் வரும் என்று தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது, தனுஷும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் இந்நிலையில் நயன்தாரா இப்படியொரு பதிவை போட்டுள்ளது மீண்டும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X