விக்னேஷ் சிவன் மூக்கின் மீது உதட்டை வைத்து.. குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்தில் நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் மட்டுமில்லாமல், சிறந்த குடும்பத் தலைவியாகவும் தன்னை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் தொடர்ந்து ரொமாண்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதனிடையே தன்னுடைய குழந்தைகள் உயிர் மற்றும் உலக்குடனும் அன்பு பாராட்டுவதிலும் தான் சளைத்தவர் இல்லை என்பதையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பதிவுகளின்மூலம் பகிர்ந்து வருகிறார். தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள நயன்தாரா, அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துவந்த நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் இந்தியிலும் ஜவான் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப் படம் 1000க்கும் மேற்பட்ட கோடிகளை வசூலித்து மாஸ் காட்டியது. தொடர்ந்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழில் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கவினுடன் இணையும் நயன்தாரா?: தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இறைவன், அன்னபூரணி ஆகிய படங்கள் சொதப்பிய நிலையில், அடுத்ததாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நயன்தாரா உள்ளார். இதனிடையே, அடுத்ததாக கவினுடன் இணைந்து படத்தில் கமிட்டாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். அந்தக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.
புதிய தொழில்களில் நயன்தாரா: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ள அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. தயாரிப்பாளராகவும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகின்றனர். இதனிடையே காஸ்மெட்டிக் துறையில் அடுத்தடுத்த பிராண்ட்களை இவர்கள் இருவரும் உருவாக்கி வருகின்றனர். இதற்கான பிரமோஷன்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் சுற்றுப்பயணம்: தற்போது இருவரும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இதையொட்டி அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. தற்போது தன்னுடைய மகன்களுடன் இருக்கும்படியான புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனின் மூக்கின்மீது முத்தம் கொடுக்கும்படியான நயன்தாராவின் புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இதனிடையே ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கவும் இவர்கள் தவறவில்லை.


Click it and Unblock the Notifications











