Nayanthara: உங்கள் தட்டில் இருப்பதுதான் வாழ்க்கையிலும் வரும்.. நயன்தாரா சொன்ன விஷயம்!
சென்னை: தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நயன்தாரா. அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, நடிகர் கவினுடன் இணைந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நயன்தாரா, அடுத்தடுத்து காஸ்மெட்டிக் துறையில் தன்னுடைய பிசினஸ்களை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய டயட் குறித்த பல விஷயங்களை அடுத்தடுத்த வாரங்களில் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர உள்ளதாக நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் பாலிவுட்டிலும் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார் நயன்தாரா. இந்த படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த நிலையில் நயன்தாராவிற்கு மிகப்பெரிய வரவேற்பை ஜவான் படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அடுத்ததாக மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார் நயன்தாரா.

அடுத்தடுத்த படங்கள்: இந்த படங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக மற்றும் கவர்ச்சியாக வைத்து வருகிறார் நயன்தாரா. திருமணம் ஆகி வாடகை தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக கவினுடன் இணைந்து புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனாலும் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் அதிகமான நேரங்களை செலவழித்து வருகிறார்.
டயட் குறித்த பதிவு: இதனிடையே விக்னேஷ் சிவனுடன் இணைந்து காஸ்மெட்டிக் துறையிலும் நயன்தாரா சில பிசினஸ்களை துவங்கி நடத்தி வருகிறார். ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் நயன்தாரா, அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டில் இன்ஸ்டாகிராமில் இணைந்திருந்த நயன்தாரா, அடுத்தடுத்த பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் ஏராளமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார். நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் 8.6 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய டயட் பிளான் குறித்த பதிவை தற்போது instagram-ல் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
மாறிய சிந்தனை: நடிகையாக இருப்பதால் தன்னுடைய உடலை சரியாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாக கூறியுள்ள நயன்தாரா, சரியான உணவின் மூலமே மகிழ்ச்சியும் ஹெல்த்தியான வாழ்க்கையையும் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். மற்றவர்களைப் போலவே டயட் என்றால் மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான் என்று தான் நினைத்து வந்ததாகவும் ஆனால் தற்போது தன்னுடைய உணவு ஆலோசகர் மூலமாக இந்த கருத்தில் இருந்து தான் விலகி உள்ளதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார். சரியான கலோரியில் மனதிற்கு பிடித்த வீட்டு உணவுகளை தான் தற்போது சாப்பிட்டு வருவதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுடன் பகிர முடிவு: தன்னுடைய இந்த உணவு அட்டவணையை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொள்ள தான் ஆர்வமாக உள்ளதாகவும் இனிவரும் வாரங்களில் இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய தட்டில் போடும் உணவு தான் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் தனது பதிவை முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











