Nayanthara: இந்த ரெண்டு விஷயம் இருந்தா யாரு நினைச்சாலும் நம்பளை கீழ இறக்க முடியாது.. நயன்தாரா பளீச்!

மதுரை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து தன்னை பிசியாகவும் பரபரப்பாகவும் வைத்துக் கொண்டுள்ளார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதுடன் பிசினசிலும் தயாரிப்பிலும் அதிகமான ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தன்னுடைய புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களையும் அதிகமாக பகிர்ந்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிவரும் நயன்தாரா அனைத்தையும் சமாளிக்கும் திறனையும் கொண்டுள்ளார். பல்வேறு விமர்சனங்களையும் இவர் சந்தித்து வருகிறார்.

nayanthara femi 9 madurai 9

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு அடுத்தடுத்த கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான பாலோயர்களையும் பெற்று வருகிறார். தன்னுடைய பிசினஸ் குறித்த பகிர்வுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

சர்ச்சைகளில் நயன்தாரா: கடந்த 2022ம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக் கொண்டார் நயன்தாரா. இவரது திருமணம் ஆவணப்படமாக கடந்த ஆண்டில் நெட்பிளிக்சில் வெளியானது. இதில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் இடம்பெற்ற நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் நயன்தாராவிற்கு 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையொட்டி பல விமர்சனங்கள், சர்ச்சைகளை சமூக வலைதளங்களில் நயன்தாரா எதிர்கொண்டார். அவரது ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்த நயன்தாரா, அதிகமான விஷயங்களுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்திருந்தார்.

வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள்: லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகிவரும் நடிகை நயன்தாரா, தன்னுடைய பிசினசையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். தயாரிப்பிலும் சிறப்பாக செய்லபட்டுவருகிறார். இந்நிலையில் மதுரையில் நடந்த பெமி 9 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாராவிற்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நயன்தாரா, வாழ்க்கையில என்ன நடந்தாலும் யார் நம்மை கீழ இறக்க நினைத்தாலும் இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது என்று தான் நினைப்பேன் என்றும் அதையே மற்றவர்களும் மெயின்டெயின் செய்தால் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

நம்பிக்கை கொடுக்கும் விஷயங்கள்: நமக்கு நம்மீது சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் இருந்தால் அதைவிட பெரிய விஷயம் வேறு இல்லை என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யார் எதை சொன்னாலும எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்துக் கொண்டாலும் நாம் தினமும காலையில் எழுந்து நம்முடைய வேலைகளை சிறப்பாக செய்துவந்தால், நம்மீது நமக்கே நம்பிக்கை வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நடந்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாகும் என்றும் மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார். ரசிகர்களிடம் இதைத்தான் பகிர வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X