Nayanthara: என் குழந்தைங்க அப்படித்தான் ஆகணும்.. அம்மாவாக மாஸ் காட்டும் நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்த தன்னுடைய திரைத்துறை பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நயன்தாரா கைவசம் மண்ணாங்கட்டி, கவினுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டியுள்ளன.

தன்னுடைய குழந்தைகள் உயிர் மற்றும் உலக்கை மிகவும் கவனமுடன் வளர்த்து வருகிறார் நயன்தாரா. அந்தவகையில் அவர்கள் இருவரும் வருங்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறேன் என நயன்தாரா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் தூங்கும்போது தான் அவர்கள் காதில் சென்று பேசுவேன் என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

nayanthara uyir ulag

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளைக் கடந்த தன்னுடைய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லாமல் இந்தி படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்த ஜவான் படம் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்திருந்தது. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்த நிலையில் வாடகை தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா. தன்னுடைய குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டுள்ளார்.

நயன்தாரா மகன்கள்: தன்னுடைய குழந்தைகள்மீது மிகுந்த அன்புடன் காணப்படும் நயன்தாரா, தான் ஷூட்டிங் சென்றாலும் அவர்களை கையோடு அழைத்து செல்கிறார். தன்னுடைய குழந்தைகளுக்கு தான்தான் சாப்பாடு ஊட்டுவேன் என்று தனது பேட்டியொன்றில் நயன்தாரா கூறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தனது தற்போதைய பேட்டியில் நயன்தாரா தன்னுடைய குழந்தைகள் குறித்தும் அவர்கள் எப்படி வளர வேண்டும் என்று தான் நினைக்கிறேன் என்பது குறித்தும் பேசியிருந்தார். உயிர் மற்றும் உலக்கிற்கு தற்போது 2 வயதாகும் நிலையில் தான் அவர்கள் தூங்கும்போது அவர்களின் காதில் போய் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அன்புதான் எல்லாம்: குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் எதிர்காலம் குறித்து பேசுவதை மருத்துவர்கள் வரவேற்பதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார். அப்படி பேசுவதை நமது உடலும் ஆத்மாவும் ஏற்று அதன்படியே செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர்கள் வருங்காலத்தில் அன்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர்கள் காதில் தூங்கும் போது சொல்வேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். பிற்காலத்தில் அவர்கள் அப்படி இருந்தால் தான் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புதான் உலகின் தேவை: அவர்கள் தைரியமாக வளருவார்கள் என்பதும் நல்ல வெற்றியுடன், வலிமையாக இருப்பார்கள் என்பதும் தனக்கு தெரியும் என்றும் ஆனால் இந்த உலகத்தில் தற்போது அன்பு மிகவும் குறைந்துள்ளதால் அவர்கள் அன்பு மற்றும் கருணையுடன் வளர்வதை தான் விரும்புவதாகும் நயன்தாரா தெரிவித்துள்ளார். இந்த உலகத்திற்கு மிகவும் முக்கியமான தேவை அதுதான் என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். நாம் அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு நபரை நமக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே விட்டுவிடலாம் என்றும் நயன்தாரா மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X