Nayanthara: எல்லாமே எனக்கு சினிமாதான் கொடுத்தது.. நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா பேட்டி!
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஷாருக்கான் -நயன்தாரா காம்பினேஷனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.
நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா வெற்றிப் பட இயக்குநர்களின் காம்பினேஷனில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ், தெலுங்கு. மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் வெளியான ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.
நயன்தாராவின் ஜவான் படம்: ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், பாலிவுட்டில் நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 1ம் தேதி நயன்தாரா நடிப்பில் ஹீரோயினை மையமாக கொண்டு அன்னபூரணி படமும் வெளியானது.
நயன்தாரா 75வது படம்: இந்தப் படம் நயன்தாராவின் 75வது படம் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ளது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகி, செஃப் ஆவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆயினும் படத்திற்கு சரியான பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அன்னபூரணி படம்: படத்தில் அன்னபூரணியாக நடித்துள்ளார் நயன்தாரா. மேலும் நடிகர் ஜெய் ஃபர்ஹானாவாகவும் சத்யராஜ் செஃப் ஆனந்தாகவும் நடித்துள்ளார். மேலும் படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சச்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, பூர்ணிமா ரவி, முகமது இர்ஃபான், திடியன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி முதல் சில தினங்களிலேயே கோடிகளில் வசூல் செய்துள்ளது.
பிரமோஷன்களில் நயன்தாரா: இந்நிலையில் படத்தின் ரிலீசை தொடர்ந்து தற்போது பிரமோஷன்களில் நயன்தாரா மற்றும் ஜெய் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவருமே தாங்கள் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களில் ஈடுபடுவதில்லை என்ற கொள்கையை உடையவர்கள். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் பிரமோஷன்களிலும் நயன்தாரா பங்கேற்கவில்லை. இந்நிலையில் இருவரும் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு பிரியாணி பரிமாறியது சமூகவலைதளங்களில் டிரெண்டானது.
நயன்தாரா -ஜெய் கூட்டாக பேட்டி: இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து நீண்ட காலங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளனர். சினிமாதான் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துள்ளதாக அந்த பேட்டியில் நயன்தாரா நெகிழ்சசியை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை ஆகியவற்றை சினிமாதான் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படங்களில் தனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











