தலை நிறைய மல்லிப் பூ.. தழைய தழைய புடவை.. அசத்தல் லுக்கில் நயன்தாரா.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை நயன்தாரா தலை நிறைய மல்லிப் பூ மற்றும் தழைய தழைய சேலையுடன் உள்ள அசத்தல் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

ரஜினி, அஜித், விஜய், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு வருகிறார். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிக்காந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.

விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

அதில் செம ஹாட் அன்ட் க்யூட்டாக இருந்தார் நயன்தாரா. அவரது அழகை அப்படி புகழ்ந்தனர் ரசிகர்கள். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார் நடிகை நயன்தாரா. இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றும் போட்டோக்கள் வெளியாவது வாடிக்கை.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

இதேபோல் பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிராக பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிராக வீட்டு வாசலில் நின்று கைகளை தட்ட சொன்ன போது கூட இருவரும் தங்களின் கைகளை ஒருவர் கையுடன் மற்றொருவர் கையை இணைத்து தட்டி ரொமான்ஸ் செய்தனர்.

ஷேர் செய்த விக்கி

ஷேர் செய்த விக்கி

அதன்பிறகு இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற சொன்ன போது கூட இருவரும் சேர்ந்து மெழுகு வர்த்தி ஏற்றினர். அந்த போட்டோக்களையெல்லாம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்.

சேலையில் நயன்தாரா

சேலையில் நயன்தாரா

கடைசியாக நடிகை நயன்தாராவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோ பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் நயன்தாரா சேலையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

தழைய தழைய சேலை

தழைய தழைய சேலை

அதில் நடிகை நயன்தாரா தலை நிறைய மல்லிப்பூ வைத்தப்படி தழைய தழைய மஞ்சள் நிற சேலையில் ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக உள்ளார். இந்த போட்டோ எப்போது எடுத்தது என்ற தகவல் இல்லாத நிலையில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X