இந்த பக்கம் தங்க புள்ள.. அந்த பக்கம் லட்டு புள்ள.. நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இந்த அழகான தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளியாகியதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
பகிரப்பட்ட புகைப்படங்களில், நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் இருவரும் தங்கள் அம்மாவை முத்தமிட்டு, அன்பாக கட்டிப்பிடித்து மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளின் முகங்களில் தெரியும் சிரிப்பும், நயன்தாராவின் முகத்தில் வெளிப்படும் தாய்மையின் மகிழ்ச்சியும் ரசிகர்களை உருக வைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி லைக்குகளை குவித்து வருகிறது. நயன்தாரா எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் அவர் எளிமையும் அன்பும் நிறைந்தே இருக்கிறார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளையும், அன்பான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

நயன்தாரா: திரையுலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்தது. திருமணம் செய்து கொண்ட 4 மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலமாக ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உயிர், உலக் என தனது குழந்தைகளுக்கு பெயர் வைத்து இருக்கும் நயன்தாரா, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை அவ்வப்போது போட்டோவாக பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

கை வசம் உள்ள படம்: நடிகை நயன்தாரா அண்மையில் சித்தார்த் மற்றும் ஆர். மாதவன் உடன் இணைந்து 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சஷிகாந்த் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், ஏப்ரல் மாதம் நேரடியாக இணையத்தில் வெளியானது. அடுத்ததாக, யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரவுன் அப்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, மம்மூட்டி மற்றும் மோகன்லால் உடன் 'பேட்ரியாட்' என்ற படத்திலும், நடிகர் கவின் உடன் இணைந்து 'ஹை' என்ற படத்திலும் நயன்தாரா கமிட்டாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











