Nayanthara: பெரிய நடிகை என்பதை மறக்க செய்த மகன்.. உயிருக்காக நயன்தாரா என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உயிர் மற்றும் உலக் என்ற அந்த குழந்தைகளுடன் தன்னுடைய உலகத்தை சுருக்கி கொண்டு வருகிறார் நயன்தாரா.

எங்கு சென்றாலும் தன்னுடைய குழந்தைகளுடன் செல்வதும் குழந்தைகளுடன் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவு செய்வதும் குழந்தைகள் மற்றும் கணவருடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஜாலி செய்வதும் என நயன்தாராவின் வாழ்க்கையில் கணவர், குழந்தைகள் என அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறது. தன்னுடைய குழந்தைகளுடன் அதிகமாக நேரத்தை செலவழித்து வரும் நயன்தாரா, அவர்கள் உடனான வீடியோக்களை அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

nayanthara instagram tamil cinema

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் படங்களில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா கடந்த ஆண்டில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். வாடகை தாய் முறையில் இந்த குழந்தைகள் பிறந்த நிலையிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டு, தான் எங்கே சென்றாலும் கூடவே குழந்தைகளையும் அழைத்து செல்லும் வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார் நயன்தாரா.

நயன்தாரா புதிய வீடியோ: தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடனும் தன்னுடைய குழந்தைகள் உயிர் மற்றும் உலகுடன் அடுத்தடுத்து போட்டோஸை வரும் நயன்தாரா, அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், அதன் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய மகன் உயிருடன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் தலைக்கு மேல் குழந்தையை நயன்தாரா தாங்கி பிடிக்க, அவர் மரத்திலிருந்து பழம் ஒன்றை பறித்து சாப்பிட முயல்வதாகவும் தொடர்ந்து அவரை, அவர் சாப்பிடும் அழகை கீழிருந்தபடிடியே நயன்தாரா ரசிப்பதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.

நயன்தாரா கண்டீஷன்: தன்னுடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னுடைய படங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறார் நயன்தாரா. அவரது படங்கள் குறைந்ததற்கு அவர் போடும் கண்டிஷன்களும் காரணமாக கூறப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே சூட்டிங்கில் பங்கேற்பேன் என்பது உள்ளிட்ட கண்டிஷன்களை அவர் தன்னுடைய குழந்தைகளுக்காக போட்டு வரும் நிலையில் அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இருந்த போதிலும் மண்ணாங்கட்டி, கவினுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.


தயாரிப்பாளர் நயன்தாரா: இதனிடையே தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே நயன்தாரா -விக்னேஷ் சிவன் இணைந்து அடுத்தடுத்த தொழில்களையும் துவங்கி நடத்தி வருகின்றனர். அழகு சாதன பொருட்களை தயாரித்து அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதன் அடுத்தடுத்த பிரமோஷன்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேற்கொண்டு வருகிறார் நயன்தாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X