Nayanthara: விக்கியுடன் சாப்பாடு ஓவர்.. அடுத்தது என்ன ரொமான்ஸ்தான்.. நயன்தாரா வெளியிட்ட பதிவு!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் திருமண நாள் கொண்டாட்டத்திற்காக தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்று பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்களின் கொண்டாட்டங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர்கள் அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்து தான் சாப்பிட்ட லஞ்ச் குறித்து நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லன்ச் ஓவர் என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 2022ம் ஆண்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றிருந்தனர். 7 ஆண்டுகளாக காதலித்து இந்த ஜோடி திருமணம் செய்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இவர்கள் இருவரும் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து காஸ்மெட்டிக் தொழிலிலும் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தொழில், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என அடுத்தடுத்து இவர்கள் பிஸியாக இருந்த போதிலும் ஒரு புறம் தங்களது கொண்டாட்டங்களையும் தவறாமல் தொடர்ந்து வருகின்றனர்.
திருமண நாள் கொண்டாட்டம்: திருமணமான சில மாதங்களிலேயே உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகளுக்கு இவர்கள் பெற்றோராக மாறியுள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்களது கொண்டாட்டங்கள் தங்களது குழந்தைகளை சுற்றி காணப்படுகின்றன. இருந்தபோதிலும் தனியாகவும் இவர்களின் ரொமான்ஸ் பக்கங்கள் எப்போதும் ஃபுல்லாகவே காணப்படுகின்றன. தங்களது திருமண நாளை ஒட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் தங்களது குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் புகைப்படங்களை அவ்வப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவம் அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

லன்ச் ஓவர்: இந்த புகைப்படங்கள் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றன. இந்நிலையில் இன்றைய தினம் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் லன்ச் ஓவர் என்ற கேப்ஷனுடன் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் க்யூட்டான காஸ்ட்யூமுடன் காணப்பட்டனர். மேலும் அடுத்தடுத்து அவர்கள் சாப்பிட்ட வித்தியாசமான உணவுகளையும் அவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த புகைப்படங்கள் மிகவும் அழகாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தன. அவர்கள் சாப்பிட்ட லன்ச்சும் மிகவும் அழகாக காணப்பட்டன. சுவை குறித்து அவர்கள்தான் கூற வேண்டும்.
அடுத்தடுத்த படங்கள்: நடிகை நயன்தாரா தற்போது அடுத்தடுத்து மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யாஷ்ஷுடனும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் மீண்டும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தன்னுடைய படங்களின் சூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்று நயன்தாரா தொடர்ந்து கண்டிஷன் போடுவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











