அழகின் இலக்கணம்... விளம்பர பட புகைப்படத்தை வெளியிட்ட நயன்!

சென்னை : நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

என் Divorce-கு காரணம்? Samantha Opens Up | வைரலாகும் அதிர்ச்சி தகவல்

சூப்பர்ஸ்டாருடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் விளம்பரப் படங்களிலும் நயன்தாரா கவனம் செலுத்தி நடிதது வருகிறார்.

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்

நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நயன். அவற்றில் அநேகமாக அனைத்து படங்களும் வெற்றி பெற்று விடுகின்றன.

சூப்பர்ஸ்டாருடன் ஜோடி

சூப்பர்ஸ்டாருடன் ஜோடி

தற்போது தமிழில் சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. படத்தில் குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. ரஜினியுடன் நயன்தாரா இணைந்து இந்தப் பாடலில் நடித்துள்ளார். சாரக் காற்றே என துவங்கும் அந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டது.

ரிலீசுக்கு தயாராக அடுத்தடுத்த படங்கள்

ரிலீசுக்கு தயாராக அடுத்தடுத்த படங்கள்

தமிழ், தெலுங்கில் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதில் பார்வையற்றவராக இவர் நடித்திருந்தார். த்ரில்லர் படமாக வெளியானது நெற்றிக்கண்.

விளம்பரப் படங்களிலும் கவனம்

விளம்பரப் படங்களிலும் கவனம்

படங்களில் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தீபாவளியையொட்டி இவர் நடித்துள்ள நகைக்கடை விளம்பரத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் கலாச்சார பின்னணியிலும் மாடர்னாகவும் இருவேறு லுக்கில் கலக்குகிறார் நயன். இரண்டு லுக்கிலும் அழகாக காணப்படுகிறார்.

விருப்பத்திற்குரிய நடிகை

விருப்பத்திற்குரிய நடிகை

கோலிவுட்டில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் நயன்தாரா. நயன்தாரா இடம்பெற்றால் அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற சென்டிமெண்ட்டும் இவர் குறித்து கோலிவுட்டில் காணப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல, தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு கண்டிப்பாக நியாயம் செய்கிறார் நயன்தாரா. தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இவரது சினிமா கேரியரை அசைக்க முடியாது என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X