கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
சென்னை : நடிகை நயன்தாரா அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் ரிலீசாக உள்ளன.
இந்நிலையில் தற்போது சூட்டிங் தளத்திலிருந்து தனது கருப்பு வெள்ளை புகைப்படங்களை இவர் பகிர்ந்துள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிப் படங்களில் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜோடியாக நடித்து வருகிறார்.

அண்ணாத்த படம்
தற்போது இவரது நடிப்பில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்துள்ள அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது.

கொண்டாட்டப் பதிவு
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ள இவர் சமீபத்தில் இருவரும் இணைந்து 6 ஆண்டுகள் ஆனதையொட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிசி
இவர்கள் வெளியிடவுள்ள கூழாங்கல் படம் தற்போது ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். தொடர்ந்து சூட்டிங்கில் பரபரப்பாக இருந்தபோதிலும் சமூக வலைதளத்திலும் தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார் நயன்தாரா.

புகைப்படங்கள் பகிர்வு
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு வெள்ளையில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் அழகாக ஜொலிக்கிறார் நயன். தொடர்ந்து இத்தகைய புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

ரஜினியுடன் டூயட்
அண்ணாத்த படத்தில் இவரும் ரஜினியும் இணைந்து பாடும் டூயட் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய மெலடியாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் 4 ஹீரோயின்கள் உள்ள நிலையில், நயன் ரஜினியுடன் டூயட் பாடும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











