ஜாலியா ஒரு செல்ஃபி... நயன்தாராவின் சூப்பர் புகைப்படம்
சென்னை : நடிகை நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜாலியாக ஒரு செல்ஃபியை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் அசைக்க முடியாத நாயகியாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தாலும் அவரது முதலிடத்தை அசைக்க முடியாமல் உள்ளது. தற்போது அரைடஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மற்றும் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் லயன் படத்தில் அட்லி இயக்கத்திலும் நயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தயாரிப்பு பணிகள்
மேலும் ரவுடி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடர்ந்து படங்களையும் தயாரித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இவர்களது தயாரிப்பில் உருவாகியுள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரவுடி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்
தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது ரவுடி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். சமீபத்தில் இவர்களது தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கள் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ளது. இதற்கென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளிநாடுகளுக்கும் சென்று வந்தனர்.

சமூகவலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களிலும் நயன்தாரா தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட்கள், தனது படங்கள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்களை அவ்வப்போது ரசிகர்களின் பார்வைக்கு தந்து வருகிறார். இதன்மூலம் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Recommended Video

ஜாலியாக ஒரு செல்ஃபி
தற்போது இவர்களது தயாரிப்பில் கவின் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பையும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஜாலியாக ஒரு செல்ஃபியை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பாசிட்டிவிட்டி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா என்றாலே அவர்களது ரசிகர்ளுக்கு எப்போதும் உற்சாகம் ஏற்படும். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களில் அந்த கேரக்டராகவே அவர் மாறி விடுவார். ஹீரோயினாக டூயட் பாடுவதிலாகட்டும் நெற்றிக்கண் போன்ற படங்களில் தனியாக செயல்படுவதிலாகட்டும் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லாத நிலை காணப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகள் அவரை தொடர்ந்து காண முடியும் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











