Nayanthara: நயன்தாரா தலையை மத்தளமாக்கிய மகன்.. அன்னையர் தினத்தில் க்யூட் வீடியோ!
சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மாஸ் காட்டி வருபவர். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் தமிழில் அடுத்தடுத்து வெளியான இறைவன், அன்னப்பூரணி படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் இவரது மண்ணாங்கட்டி படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது மண்ணாங்கட்டி படம். இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தை செலப்ரேட் செய்யும் வகையில் தன்னுடைய மகன்கள் உயிர் உலக் குறித்து குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நயன்தாரா. மிகவும் க்யூட்டான இந்த வீடியோ ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகையாக மாஸ் காட்டி வருகிறார். கடந்த ஆண்டில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலிருந்து பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்று இருந்தார். இந்த படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து இயக்குனர் அட்லிக்கும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாரா தொடர்ந்து உயிர் மற்றும் உலக் என இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் முறையில் அம்மாவாகியுள்ளார்,
குழந்தைகள் வளர்ப்பில் அதிக அக்கறை: தன்னுடைய குழந்தைகள் வளர்ப்பில் மிகப்பெரிய அளவில் அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா, எங்கே சென்றாலும் தன்னுடைய குழந்தைகளுடன் செல்வது, குழந்தைகளுக்காக தன்னுடைய ஷூட்டிங்கை மாற்றிக் கொள்வது, சென்னையிலேயே ஷூட்டிங்கை வைத்துக்கொள்ள இயக்குனர்களிடம் கேட்பது என இவர் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுகின்றன, இருந்தபோதிலும் தன்னுடைய குழந்தைகள் தான் தன்னுடைய உலகம் என்பதில் உறுதியாக உள்ளார் நயன்தாரா, இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தொடர்ந்து எங்கே சென்றாலும் குழந்தைகளுடன் மற்றும் நயன்தாராவுடன் இணைந்தே செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார்.
அன்னையர் தினத்தில் க்யூட் வீடியோ: இவர்கள் இருவருமே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகின்றனர், மேலும் தங்களது குழந்தைகளுடன் காணப்படும் வீடியோக்களை அடுத்தடுத்து பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்களையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி நயன்தாரா வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய உயிர் உலக் தன்னுடைய மகன்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரது மகன் நயன்தாராவின் தோள் மீது அமர்ந்து கொண்டு அவர் தலையை மத்தளம் ஆக்கி தாளம் போட்டதை பார்க்க முடிந்தது.
அன்னையர் தின வாழ்த்து: இந்த வீடியோவில் அவரது இந்த செயலை மிகவும் என்ஜாய் செய்வதாக நயன்தாரா காணப்பட்டார். இன்றைய தினம் சர்வதேச அளவில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடிகர்கள் பலரும் பல வீடியோக்களையும் தங்கள் தாய் குறித்த பல மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் இந்த தருணத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார் நயன்தாரா. அன்னையர் தின ஸ்பெஷலாக இந்த வீடியோவை விக்னேஷ் சிவனும் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











