Nayanthara: 40 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. நயன்தாராவின் போட்டோவிற்கு குவியும் லைக்குகள்!
சென்னை: சோஷியல் மீடியாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை நயன்தாரா தற்போது அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அந்த படத்தில் க்யூட்டான அழகு தேவதையாக இருந்த நயன்தாரா, ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்து இருந்தேன் என ஒரே ஒரு பாட்டு பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. அந்த நேரத்தில் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவும் இவரும் காதலித்ததாக சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா: ஆனால், இருவரும் சில காலம் காதலித்து வந்த நிலையில் திடீர் பிரேக்கப் ஏற்பட சினிமாவிலிருந்து சில காலம் பிரேக் எடுத்தார் நயன்தாரா. இதை தொடர்ந்து சிவாஜி படத்தில் ஒரே பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார். அந்த பாடலில் ஸ்லிம் லுக்கில் இருந்தார். இதைத்தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தில் காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்து தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.

காதல் திருமணம்: நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் 6 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய்சேதுபதி, சூர்யா,அனிருத் என பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ 'Nayanthara: Beyond the Fairy Tale' என தலைப்பில், ஆவணப்படமாக வரும் நவம்பர் 18-ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

யாரும் நம்ப மாட்டாங்க: சோஷியல் மீடியாவில் தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா முதன் முதலாக ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி படத்தை ப்ரோமோட் செய்தார். அதைத்தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தில் தயாரிப்புகளை அதில் வெளியிட்டு வந்தார்.தற்போது இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் இவர், செம ஸ்டைலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில்,நயன்தாராவிற்கு 40 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











