விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக மரத்தை திருமணம் செய்யும் நயன்.. தோஷ நிவர்த்தியா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பாக மரத்தை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

மகன் கைதால் அப்செட்

மகன் கைதால் அப்செட்

அதோடு பாலிவுட்டிலும் பிஸியாக உள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கான் தனது மகன் கைதால் அப்செட்டில் உள்ளார். இதனால் தனது படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இதன் காரணமாக நயன்தாராவும் ஃபிரியாக இருப்பதால் தனது காதலருடன் கோவில்களுக்கு சென்று வருகிறார். நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என தகவல் பரவி வருகிறது.

மரத்தை திருமணம் செய்யும் நயன்

மரத்தை திருமணம் செய்யும் நயன்

இந்நிலையில் நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன், ஷீரடி, மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் கர்நாடகாவில் உள்ள பழங்கால கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளும் முன்பாக மரம் ஒன்றை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோஷ பரிகார நிவர்த்தி

தோஷ பரிகார நிவர்த்தி

நயன்தாராவின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளும் முன்பு மரம் ஒன்றை திருமணம் செய்து தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால் நடிகை நயன்தாரா இந்த பரிகாரத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மதம் மாறிய நயன்

மதம் மாறிய நயன்

மலையாள சிரியன் கிறிஸ்டியனான நடிகை நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதல் உறவில் இருந்த போது இந்து மதத்துக்கு மாறினார். அப்போது முதல் இந்து பழக்கவழக்கங்களை தீவிரமாக பின்பற்றி வருகிறார் நயன்தாரா. நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்ளும் முன்பாக காசி, அயோத்தி மற்றும் பெங்களூரில் 3 மரங்களை திருமணம் செய்து பரிகாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X