Nayanthara: நயன்தாராவுடன் கோவிலுக்கு போன ஸ்ரீலீலா.. அடடே கூட இவரும் போயிருக்காரே!
சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை, முன்னணி நடிகையும் கூட. பெரிய ஸ்டார்களுடன் மட்டும் நடிப்பது, இல்லையென்றால் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிப்பது என இருக்கிறார் நயன்தாரா. இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள படமான எல்.ஐ.கே படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நயன்தாரா, நடிகை ஸ்ரீ லீலா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் என மூவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பலராலும், விரும்பப்படுகிற ஜோடிகளில் ஒன்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் . இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி, ஷாரூக் கான் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் தொடர்பான வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

காதல் டூ கல்யாணம்: இவர்கள் இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாற, அது திருமணத்தில் முடிந்தது. அதேபோல் இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று பெயர் சூட்டி உள்ளார்கள். இவர்கள் இருவரும் ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.
எல்.ஐ.கே: தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான எல்.ஐ.கே படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படத்தின் பிரதான தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தான் என்றாலும், படத்தின் பட்ஜெட்டை எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால், ரௌடி பிக்சர்ஸும் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கோவில் தரிசனம்: அதேபோல் நயன்தாரா தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் நயன்தாரா, நடிகை ஸ்ரீ லீலா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் என மூவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோவிலில் அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











