காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் தனது காதலருடன் வழிபாடு நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Tirupati Visit | Tamil Filmibeat

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊர் அறிந்த விஷயம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

மதம் மாறிய நயன்தாரா

மதம் மாறிய நயன்தாரா

அடிக்கடி இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஓய்வை கழித்து வருகின்றனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நடிகை நயன்தாரா, கடந்த 2011ஆம் ஆண்டு இந்து மதத்துக்கு மாறினார்.

அதிகாரப்பூர்வ பெயரான நயன்தாரா

அதிகாரப்பூர்வ பெயரான நயன்தாரா

மேலும் ஸ்டேஜ் பெயரான நயன்தாரா என்ற பெயரை தனது அதிகாரப்பூர்வ பெயராகவும் மாற்றிக் கொண்டார் நயன்தாரா. அப்போது முதல் அடிக்கடி கோவில்களுகு சென்று வருகிறார். விக்னேஷ் சிவனுடனான காதலுக்கு பிறகு இருவரும் இணைந்து பல கோவில்களில் வழிபாடு செய்துள்ளனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருவரும் ஜோடியாக வழிபாடு நடத்தினர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.

விக்கியுடன் சாமி தரிசனம்

விக்கியுடன் சாமி தரிசனம்

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைலாகி வருகிறது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடி

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடி

மேலும் அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X