Nayanthara: என் வாழ்க்கையில் நீ.. டெஸ்ட் பட சூட்டிங்கை நிறைவு செய்த நயன்தாரா உருக்கம்!
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய திருமணம், குழந்தைகள் பிறப்பு என எந்த விஷயமும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் பார்த்து வருகிறார் நயன்தாரா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நயன்தாரா, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது அன்னபூரணி படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் ஜவான், இறைவன் படங்களும் நயன்தாரா நடிப்பில் வெளியாகின.
இவற்றில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீசானது. இந்தப் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், நயன்தாராவிற்கும் பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பு காணப்பட்டது. தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தன்னுடைய கணவர், விக்னேஷ் சிவனுடன் இணைந்து அடுத்தடுத்த பிசினசையும் நயன்தாரா துவக்கி வருகிறார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித், மம்முட்டி என முன்னணி நகடிர்களுடன் நடித்துள்ள நயன்தாரா கைவசம் தற்போது சில படங்கள் உள்ளன. சமீபத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்திருந்த அன்னபூரணி படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் சமையல் கலைஞராக சாதிக்கத் துடிக்கும் பெண் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார்.
நயன்தாராவின் டெஸ்ட் படம்: இந்தப் படத்தை தொடாந்து தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் டெஸ்ட் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்ப்படம், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தயாரித்த சஷிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டெஸ்ட் படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவுடன் இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த சூட்டிங்குடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
சூட்டிங்கை நிறைவு செய்த நயன்தாரா: இந்தப் படத்தின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நயன்தாரா, தனக்கு தேவைப்படும்போது தனது வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று படத்தில் தன்னுடைய குமுதா கேரக்டர் குறித்து பேசியுள்ளார். மேலும் நீயாக இருப்பதை நான் மிஸ் செய்யப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். குமுதாவிற்காக இயக்குநர் சசிகாந்திற்கும் நன்றி தெரிவித்துள்ள நயன்தாரா, படத்தில் குமுதாவின் பெரிய வலிமையாக இருந்த மாதவன் மற்றும் முன்னுதாரணமாக இருந்த சித்தார்த்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அன்பின் உழைப்பை காண அனைவரும் காத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சஷிகாந்த் -மாதவன் கூட்டணி: மேலும் இயக்குநர் சசிகாந்துடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பழமை வாய்ந்த கோயிலின் பின்புலத்தில் இந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளன. சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இயக்குநர் சசிகாந்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் அறிவிக்கப்பட்டு சூட்டிங் மும்முரமாக நடத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக சசிகாந்துடன் நடிகர் மாதவன் இணைந்துள்ளார். முன்னதாக இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களில் அவர் சசிகாந்த் தயாரிப்பில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











