Annapoorani: காலை மட்டும் நனைத்தால் நீச்சல் அடிக்க முடியாது.. அன்னபூரணி படத்தின் ஸ்னீக் பீக்!
சென்னை: நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அன்னபூரணி.
படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகி சில தினங்களிலேயே 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். அவருக்கும் பாலிவுட்டில் இந்தப் படம் சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தது.
அன்னபூரணி படம்: முன்னதாக நயன்தாரா -ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் நேற்றைய தினம் அன்னபூரணி படம் ரிலீசாகியுள்ளது. நாயகியை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
நயன்தாராவின் 75வது படம்: பிராமண குடும்பத்தில் பிறந்து சமையல் தொழிலை தன்னுடைய கேரியராக கொள்ளும் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்தப் படம் பேசுகிறது. நயன்தாராவின் 75வது படமாக வெளியான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படம் அதிகமான திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. படத்தின் பிரமோஷன்கள் முன்னதாக சிறப்பாக செய்யப்பட்டன. படத்தின் போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிகுந்த வரவேற்பை பெற்றன.
படத்திற்கு பலம் சேர்த்த தமனின் இசை: இந்தப் படத்தின் முதல் பாதி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எளிமையாக கதைக்களத்தில் படம் அமைந்துள்ளதால் காட்சிகளை யூகிக்க முடிவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் ஸ்டைலான மேக்கிங்கில் வெளியாகியுள்ள போதிலும் திரைக்கதையில் ரசிகர்களை ஈர்க்க இயக்குநர் தவறிவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் மிகபெரிய பலமாக இசையமைப்பாளர் தமனின் இசை அமைந்துள்ளதாகவும் கமெண்ட்ஸ் வெளியாகியுள்ளன.
அன்னபூரணி படத்தின் ஸ்னீக் பீக்: இந்நிலையில் தற்போது அன்னபூரணி படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சாமிக்கு பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்து தான் அசைவத்தை எப்படி சமைப்பது என்று கேள்வி எழுப்புகிறார் நயன்தாரா. அவருக்கு பதிலளிக்கும் ஜெய், தொழிலையும் பக்தியையும் ஒன்று சேர்க்க வேண்டாம் என்று பல புராண கதைகளின் மூலம் தெளிவுப்படுத்துவதாக இந்த ஸ்னீக் பீக் அமைந்துள்ளது. மேலும் காலை மட்டும் நனைத்தால் நீச்சல் அடிக்க முடியாது என்றும் முழுவதும் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். இதன்மூலம் நயன்தாரா தெளிவுபெறுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











