Nayanthara: நயன்தாரா -துரை செந்தில்குமார் கூட்டணி.. சென்டிமெண்ட் தூக்கலாத்தான் இருக்கும் போலயே!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்திருந்த ஜவான் மற்றும் ஜெயம்ரவியுடன் இறைவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆன நிலையில் உயிர், உலக் என இரு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார் நயன்தாரா. தன்னுடைய கணவருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களையும் திட்டமிட்டு வருகிறார். அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை அவரது ரௌடி பிக்சர்ஸ் செய்து வருகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த ஆண்டில் இணைந்த நயன்தாரா அடுத்தடுத்த தன்னுடைய குடும்பத்தினரின், குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார். குறுகிய காலத்திலேயே இவரை 7.4 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்களையும் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

Actress Nayantharas Nayanthara 81 movie to be direct by Director Durai Senthilkumar

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த சிறப்பான படங்களில் தன்னை இணைத்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து இவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார். முதல் படத்திலேயே நடிகர் ஷாருக்கான் மற்றும் அட்லீ காம்பினேஷனில் இணைந்திருந்தார் நயன்தாரா. இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டிலேயே நயன்தாரா -ஜெயம்ரவி காம்பினேஷனில் இறைவன் படம் வெளியானது. தொடர்ந்து அன்னபூரணி படமும் வெளியானது.

அடுத்தடுத்த படங்கள்: இறைவன் மற்றும் அன்னபூரணி படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தொடாந்து அடுத்தடுத்து நடிப்பு மற்றும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. சமூக வலைதளங்களிலும் கடந்த ஆண்டிலிருந்து விறுவிறுப்பாக இருந்து வருகிறார். ஜவான் படத்தின் ரிலீசின்போது பிரமோஷன்களில் பங்கேற்கவில்லை. ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் குறித்து இவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தன்னுடைய குழந்தைகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இதுமட்டுமில்லாமல் கணவர் விக்னேஷ் சிவனுடன் தான் இருக்கும் வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்த பிசினஸ்களை துவங்கிவரும் நயன்தாரா, அதுகுறித்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய நயன்தாரா81 படத்திற்காக இயக்குநர் துரை செந்தில்குமாருடன் நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தன்னுடைய ரௌடி பிங்கசர்ஸ் நிறுவனத்தின்மூலம் தயாரிக்கவுள்ளார்.

இயக்குநர் துரை செந்தில்குமார்: இந்தப்படத்தில் ஒரு யானைக்கும் இளம் பெண்ணிற்கும் இடையிலான பந்தத்தை கதைக்களமாக துரை செந்தில்குமார் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு தற்போது நயன்தாரா ஓகே சொல்லியுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு லெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சூரியுடன் கருடன் படத்தில் இணைந்து பணியாற்றிவரும் துரை செந்தில்குமார், அடுத்ததாக நயன்தாராவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக லெஜெண்ட் சரவணனின் படத்தையும் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X