நடிகையாக மட்டுமில்ல தொழிலதிபராகவும் சாதித்த நயன்தாரா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: நயன்தாரா இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளை முன்னிட்டு, நயன்தாராவின் கணவர் விஷ்ணேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, நடிகையாக மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழ்கிறார். ரூ.200 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்ட அவர், சரும பராமரிப்பு முதல் உணவு தொழில் வரை பல்வேறு துறைகளில் நிறுவனங்களை தொடங்கியும், முதலீடுகளையும் செய்துள்ளார். திரைப்பட உலகத்தையும், வணிக உலகத்தையும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் நயன்தாரா இணைந்துள்ள நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.

நடிகை நயன்தாரா Nayanthara: Beyond the Fairytale என்ற ஆவணப்படம் மூலம் தனது வாழ்க்கை பயணத்தையும், இயக்குனர் விஷ்ணேஷ் சிவன் மீதான காதல் பற்றியும் மனம் விட்டு பேசி இருந்தார். திரையில் வெற்றி ருசித்த நயன்தாரா, பின்னர், நடிப்பைத் தாண்டி பல துறைகளில் தனது தடத்தை பதித்துள்ளார். கணவர் விஷ்ணேஷ் சிவன் மற்றும் டெய்ஸி மோர்கன் ஆகியோருடன் இணைந்து 9Skin எனும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார். சரும பராமரிப்பில் உள்ள ஆர்வத்தின் பேரில், உயர்தரமானதுடன் விலைகுறைவான தயாரிப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்.

Nayanthara net worth
Photo Credit:

நயன்தாரா: அதன் பின், மகளிர் மருத்துவர் டாக்டர் கோமதி ஆகியோர் இணைந்து Femi9 என்ற பெண்கள் சுகாதாரப் பிராண்டை தொடங்கினர். The Lip Balm Companyயை ஆரம்பித்தார். மேலும், The Divine Foods, சாய் வாலே தேநீர் நிறுவனத்தையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் தொழி ₹100 கோடி முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் 2021ம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஷ்ணேஷ் சிவன் இணைந்து Rowdy Pictures எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.இந்த தயாரிப்பி நிறுவனத்தின் முதல் படமான நெற்றிக்கண் திரைப்படத்தை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து, Koozhangal, Rocky, Kaathuvaakula Rendu Kaadhal போன்ற வெற்றிப் படங்களையும் தயாரித்தது. ரூ.50 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் வலுவான இடத்தை பெற்றது.

நயன்தாரா சொத்துமதிப்பு: நடிகையாக மட்டுமில்லாமல் தொழிலதிபராக இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல், ₹50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தனியார் ஜெட் விமானத்தை சொத்தமாக வைத்து இருக்கிறார். சென்னையில் ₹100 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான வீடு மற்றும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் தலா ₹30 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி வீடு மற்றும் சொந்த ஊரான கேரளா உள்ள வீடுகள் உட்பட இந்தியா முழுவதும் நயன்தாராவிற்கு பல ஆடம்பர சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X