Nayanthara: ராக்காயி ஆக மாறிய நயன்தாரா.. என்ன இப்படி வெட்டி சாய்க்கிறாங்க.. மிரட்டும் டைட்டில் டீசர்

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஐயா படத்தில் நடித்து இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில் 20 ஆண்டுகளை கடந்த இவரது சினிமா பயணம் வெற்றிகரமாகவே தொடர்ந்து வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய நீண்டநாள் காதலர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரத்தை அடுத்த ஒரு பிரம்மாண்டமான ரெசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் தற்போது இரண்டரை ஆண்டுகளை கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதையொட்டி சர்ச்சைகளும் காணப்படுகின்றன.

nayanthara

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் முன்னணி நடிகையாக சாதனை படைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரட்டை குழந்தைகளுக்கு இவர் தாயாகியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாரா தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா ஆவணப்படம்: இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று வினாடி காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நடிகரும் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்பதாக நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நானும் ரவுடிதான் படத்தின் இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷின் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார்.

nayanthara

நயன்தாரா பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நயன்தாராவிற்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ராக்காயி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் மூவிவர்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அதிரடியாக காணப்படுகிறார் நயன்தாரா.

nayanthara

ராக்காயி டைட்டில் டீசர்: இந்த டைட்டில் டீசரில் அழும் தன்னுடைய குழந்தைக்கு பாலை கொடுத்தபடியே, ஒரு பக்கத்தில் மிளகாயை அரைக்கிறார் நயன்தாரா. இதையடுத்து அவரது வீட்டை நோக்கி ஏராளமானவர்கள் கைகளில் தீப்பந்தத்துடனும் ஆயுதங்களுடனும் வருகின்றனர். தொடர்ந்து வெளியில் அரிவாளுடன் வரும் நயன்தாரா, அவர்களை ஒருவர்பின் ஒருவராக வெட்டிச் சாய்ப்பதாக இந்த அறிவிப்பு டீசரில் காணப்படுகிறது. தொடர்ந்து தான் அரைத்த மிளகாயை அவர்கள் மீது தூவுவதாகவும் காணப்படுகிறது. ரத்தம் தெறிக்க இந்த டீசரில் காணப்படுகிறார் நயன்தாரா. படம் பீரியட் படமாக காணப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X