Actress Nayanthara: புடவையிலும் ஜொலிக்க முடியுமா.. மீண்டும் நிரூபித்த நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் நயன்தாரா இணைந்து நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடைந்துள்ளது. 1000 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. திருமணமாகி வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார்.

நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. அடுத்தடுத்த பிசினஸ்களையும் இந்த ஜோடி தொடங்கி வருகிறது. இவற்றையெல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடையே பகிர்ந்து வருகிறார் நயன்தாரா. இவை மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Actress Nayanthara s new photoshoot pictures in Saree

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாராவின் பயணம் 20 ஆண்டுகளை கடந்து மாஸாக காணப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துவந்த நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் பாலிவுட்டில் ஜவான் படம் வெளியானது. ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் வெளியான இந்தப் படம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. வசூலிலும் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தில் ஷாருக்கான் -நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பார்க்கப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நயன்தாரா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் கடந்த ஆண்டில் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இறைவன், அன்னபூரணி படங்கள் வெளியாகின. இவை இரண்டுமே கலவையான விமர்சனங்களையே பெற்றன. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா. நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் என சுழன்று சுழன்று செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. அவரது அடுத்தடுத்த படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ள சூழலில், அடுத்ததாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் நயன்தாராவிற்கு உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. இவரது அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள் அதிகமான லைக்ஸ்களை தொடர்ந்து பெற்று வருகின்றன. நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்து இன்னும் ஒரு ஆண்டுகூட பூர்த்தியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் இணைந்தார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே 8 மில்லியன் பாலோயர்களை அவர் பெற்றுள்ளார். இதனிடையே தற்போது புடவையில் அழகான போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

புதிய போட்டோஷுட் போட்டோஸ்: நேற்று முன்தினம் விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி குடும்பத்தினருடன் வாழ்த்துக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து இன்றைய தினம் அழகான புடவையில் போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், அழகான கொண்டையுடன் இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. ஏராளமான கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X