Nazria: தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. பொன்னாக மின்னும் நஸ்ரியாவின் போட்டோஸ்

திருச்சூர்: தமிழ் சினிமாவிற்குள் தனது க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ் மூலம், ஒரு சில படங்களிலேயே மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தினை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. இவரது க்யூட்டான எக்ஸ்பிரஸன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் கேரளாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நய்யாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

ஹோம்லி ரோல்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக் கொண்ட நடிகைகளில் நஸ்ரியாவும் ஒருவர். இப்படியான நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நய்யாண்டி படத்தின் வெளியீட்டின்போது பெரும் சர்ச்சையே ஏற்பட்டது. படத்தின் நாயகனாக நடித்தவர் தனுஷ். இந்த படத்தில் ஒருபாடலில் தனுஷ் நஸ்ரியாவின் இடுப்பை பிடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியில் தான் நடிக்கவில்லை என்றும் வேறு ஒருவர் நடித்ததாகவும் நஸ்ரியா கூறினார். மேலும் இதனை படக்குழு தரப்பில் இருந்தும் விலக்க வேண்டும் எனக் கூறினார். இந்த படம் அதே ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தினைப் போலவே இருந்தது மட்டும் இல்லாமல் காமெடி சீன்களும் பெரிதாக ஒர்க்-அவுட்டே ஆகவில்லை. இதனால் படமும் பிளாப் ஆனது.

Nazria Nazim Fahadh Faasil

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓசனா படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிவின் பாலி நடித்திருந்தார். இவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தைப் பார்க்கும்போது இவர் படத்தில் நடித்தால் போதும் கட்டாயம் பெரிய வெற்றிகளை படங்கள் குவிக்கும் எனக் கூறும் அளவிற்கு தமிழ் மற்றும் கேரள சினிமாக்களில் பேசப்பட்டார். ஆனால் நஸ்ரியா இந்த பேச்சுக்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருந்தார்.

Nazria Nazim Fahadh Faasil

திருமணம்: சினிமாவில் உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது தனது 19வது வயதில் நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஃபகத் ஃபாசிலுக்கு வயது, 32. இவர்கள் இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வித்தியாசம் இருந்ததால், திருமணத்தின்போது இவர்களை மையப்படுத்தியே அதிக பேச்சுகள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு சினிமா பிரபலங்களில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் கணவன் மனைவியாக இவர்கள் உள்ளனர்.

Nazria Nazim Fahadh Faasil

கம்பேக்: அதன்பின்னர் நஸ்ரியா கடந்த 2020ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் படத்தில் ஒரு காதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மிகவும் மாடர்னான பெண்ணாக நடித்து ரசிகர்களை மிரட்டி விட்டிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா ஊரடங்கு உத்தரவினால் படம் திரையரங்கில் அதிக நாட்கள் திரையிடப்படவில்லை.

Nazria Nazim Fahadh Faasil

நயனுடன் மீட்டிங்: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட விக்கி - நயன் தம்பதியரும், நஸ்ரியா - ஃபகத் ஃபாசில் தம்பதியர் சந்தித்துக் கொண்டனர். இது குறித்து நடிகை நஸ்ரியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு, தனது மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக அந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக , இறுதியாக சந்தித்துவிட்டோம். இந்த நாளுக்காக நாங்கள் எவ்வளவு நாட்களைக் கடந்து வரவேண்டியது இருந்தது" என எழுதியிருந்தார்.

போட்டோ சூட்: படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் நஸ்ரியாவுக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். அவ்வப்போது போட்டோ சூட்டிங் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது மஞ்சள் நிற சேலை கட்டி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை தாராளமாக அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X