Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜித்துக்கு ஜோடியாகிறாரா நஸ்ரியா?
Recommended Video
சென்னை: நடிகை நஸ்ரியா அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார்.
பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இப்போது அவர் சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு எதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா எனத் தெரியவில்லை.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்திப் படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது. அஜித் தற்போது சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
நான்காவது முறையாக அஜித் சிவா கூட்டணி என்பதால், வேறு இயக்குனர்களோடு அஜித் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை எச்.வினோத் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.