வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா .. நடிகை நஸ்ரியாவின் க்யூட் புகைப்படங்கள் வைரல்!
சென்னை: தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை நஸ்ரியா
டிரான்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நஸ்ரியா நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
இப்பொழுது தெலுங்கில் அன்டே சுந்ராணிக்கு என்ற படத்தில் நடித்து வரும் நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா என வர்ணித்து வருகின்றனர்.

வசீகரிக்கும் அழகு
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மேட் டாட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் நஸ்ரியா. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான நேரம் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். க்யூட்டான நடிப்பு வசீகரிக்கும் அழகு என முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். நேரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் மளமளவென குவித்தன.

சினிமாவுக்கு ரீ-என்ட்ரி
ராஜா ராணி, நய்யாண்டி,வாயை மூடி பேசவும்,திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தவர் இப்பொழுது மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல்முறையாக தெலுங்கில் அறிமுகம்
அந்தவகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான டிரான்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நஸ்ரியா இப்போது தமிழ் தெலுங்கு தமிழ் மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். இதுவரை கியூட்டான நடிகையாக மட்டுமே இருந்த நஸ்ரியா டிரான்ஸ் படத்தில் ஆளே டோட்டலாக மாறி புகைப்பிடிக்கும் காட்சிகளிலும் அரைகுறை உடைகளில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார்

அன்டே சுந்ராணிக்கு
தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நஸ்ரியா இப்போது தெலுங்கிலும் அறிமுகமாகிறார். அந்த வகையில் நடிகர் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள அன்டே சுந்ராணிக்கு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாக உள்ளது அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

க்யூட் புகைப்படங்கள்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா அழகான க்யூட்டான உடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா என வர்ணித்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











