மியாவ் மியாவ் பூனை.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படம் !
திருவனந்தபுரம் : நடித்த முதல் திரைப்படத்திலேயே தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை தனது பின்னால் அலைய வைத்தவர் நடிகை நஸ்ரியா நசீம்.
Recommended Video
நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா திருமணத்திற்குப்பின் திரைப்படங்களில் நடிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்த நிலையில் தற்பொழுது 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான "ட்ரான்ஸ்" திரைப்படத்தில் அனைவரும் அலண்டு போகும் வித்தியாசமான தோற்றத்தில் சிகரெட்டும் கையுமாக நடித்து அதகளப் படுத்திருந்த நஸ்ரியா இப்பொழுது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பின்னால் அலைய வைத்த
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த நஸ்ரியா நசீம் முதல் முறையாக கதாநாயகியாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்ட நேரம் திரைப்படத்தை பார்த்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை பின்னால் அலைய வைத்த பெருமை நடிகை நஸ்ரியாவுக்கே உண்டு.

நிவின் பாலியின் கெமிஸ்ட்ரி
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நேரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பல மடங்கு வசூலை அள்ளியது. குறிப்பாக நஸ்ரியா மற்றும் நிவின் பாலியின் கெமிஸ்ட்ரி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்த நிலையில் நஸ்ரியாவிற்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இந்த திரைப்படத்தின் மூலம் உருவாகின.

மிக பிஸியாக
நேரம் திரைப்படத்தை தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் என்னும் நிக்கா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்த நஸ்ரியா அதேசமயம் மலையாளத் திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

ஹவுஸ்புல்லாக ஓடி
இவ்வாறு தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் மயக்கி வைத்திருந்த நஸ்ரியா, துல்கர் சல்மான், நிவின் பாலி உடன் இவர் இணைந்து நடித்த "பெங்களூர் டேஸ்" படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளி அதோடு, இந்திய அளவில் பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வந்தது. பின் இந்த படம் தமிழில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா மற்றும் ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் "பெங்களூர் நாட்கள்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

செகண்ட் இன்னிங்சை
இவ்வாறு திரைப்படங்களின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வந்த நஸ்ரியா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

க்யூட் நஸ்ரியா ஈஸ் பேக்
சமீபத்தில் வெளியான" ட்ரான்ஸ்" திரைப்படத்தில் பாப் கட்டிங், ஷார்ட் ட்ரெஸ், ஓவர் லிப்ஸ்டிக் மற்றும் சிகரெட்டும் கையுமாக அனைவரும் அலண்டு போகும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து அதகள படுத்திருந்த நஸ்ரியா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை "பழைய க்யூட் நஸ்ரியா ஈஸ் பேக்"என சொல்ல வைத்துள்ளார்.

விரலை கன்னக்குழியில்
முழுவதும் மிக்கி மவுஸ் படம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்தவாறு, பூனைபோல குட்டி ஜடையும், அழகான கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு விரலை கன்னக்குழியில் வைத்துக்கொண்டு ரசிகர்களை மயக்கும் செம க்யூட்டாக இருக்கும் இந்த க்யூட்டான
பூனை போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











