Nazriya: 4 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் நஸ்ரியா படம்.. மிரட்டும் ட்ரெயிலர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா

சென்னை: நடிகை நஸ்ரியா மலையாளத்தில் சின்னத்திரை ஆங்கராகவே தன்னுடைய கேரியரை துவங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அடுத்தடுத்து கதவை தட்டியது. தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தான் முன்னணி நடிகையாக பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார் நஸ்ரியா. இதையடுத்து படங்களில் நடிக்காமல் சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த நஸ்ரியா, மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இறுதியாக தெலுங்கில் கடந்த 2022ம் ஆண்டில் நடித்திருந்தார்.

nazriya nazim basil joseph

நடிகை நஸ்ரியா நசிம்: நடிகை நஸ்ரியா நசிம் சின்னத்திரையில் ஆங்கராகவே தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடித்து மிகவும் பிசியான நடிகையாக மாறினார். தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறினார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தன்னுடைய துருதுரு நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் பிசியான நடிகையாக இருந்தபோதே நடிகர் பகத் ஃபாசிலை காதலித்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

சூக்க்ஷமதர்ஷினி படம்: திருமணத்தை தொடர்ந்து சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஆனால் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே இவரை பார்க்க முடிகிறது. இறுதியாக தெலுங்கில் நானியுடன் இவர் நடித்திருந்த அன்டே சுந்தரானிகி படம் ரிலீசானது. இந்தப் படம் தமிழிலும் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நஸ்ரியா நடிப்பில் சூக்க்ஷமதர்ஷினி படம் உருவாகியுள்ளது. படம் வரும் நவம்பர் 22ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு படம்: இந்தப் படத்தில் பசில் ஜோசப்புடன் நஸ்ரியா இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. எம்சி ஜித்தின் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக மலையாளத்தில் நஸ்ரியா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் டிரான்ஸ் படம் ரிலீசானது. இதையடுத்து அவரது கம்பேக்கிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 4 ஆண்டுகள் கழித்து சூக்க்ஷமதர்ஷினி படம் வெளியாகவுள்ளது.

சூக்க்ஷமதர்ஷினி பட ட்ரெயிலர்: அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிப் படங்களில் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா, தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அடடே சுந்தரானிகி படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்தும், டிரான்ஸ் படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் தற்போது சூக்க்ஷமதர்ஷினி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படம் நஸ்ரியாவிற்கு மிகச்சிறப்பான கம்பேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: nazriya nazim basil joseph
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X