'நெகு நெகு' கவர்ச்சிக்கு மாறிய நீலிமா ராணி!
சென்னை: இதோ.. இன்னும் ஒரு கவர்ச்சி அவதாரப் பார்வை சினிமாவுக்குக் கிடைத்துள்ளார். அவர் டிவி நடிகை மற்றும் சினிமா நடிகை நீலிமா ராணி.
டிவி மூலம் பாப்புலரான நீலிமா ராணி இப்போது கவர்ச்சி அவதாரத்திற்கு மாறியுள்ளார். அவரது புதிய கவர்ச்சி ஸ்டில்களை உலா விட்டுள்ளார்.
டிவியில் நடித்து வந்த நீலிமா இப்போது சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் திடீரென கவர்ச்சி அவதாரம் பூசியுள்ளார்.

நீலிமாவின் கதை
ஒரு பெண்ணின் கதைதான் நீலிமாவின் முதல் டிவி சீரியல். அப்போது அவர் பள்ளிச் சிறுமிதான்.

தேவர் மகள்
அதேசமயம், தேவர் மகன், விரும்புகிறேன் ஆகிய படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாகவும் தலை காட்டியுள்ளார்.

கார்த்தியின் தோழி
நிறைய டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திடீரென சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கார்த்தியின் தோழியாக நான் மகான் அல்ல படத்தில் நடித்தார். இந்த வேடத்திற்காக எடிசன் சிறந்த துணை நடிகை விருது அவருக்குக் கிடைத்தது.

திமிரு
அதேபோல திமிரு படத்திலும் நாயகியின் தோழியாக வந்து போனார்.

முக்கிய வேடத்தில் முரண்
பின்னர் முரண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

கவர்ச்சிக்கும் தயாரோ...?
தற்போதைய அவரது கவர்ச்சி ஸ்டில்கள் மூலம் தான் கவர்ச்சிகரமான, துணிச்சலான ரோல்களுக்கும் தயார் என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.

வில்லியாக நடிக்க ஆசை
ஏற்கனவே ஒரு பேட்டியின்போது ரம்யா கிருஷணன் படையப்பாவில் செய்தது போல பவர்புல் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் நீலிமா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











