ஹிட்லரின் மனைவியாக நடிக்கப் போகும் நேஹா தூபியா

ஹிட்லர் குறித்து பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளனர். அதில் நேபா தூபியா ஹீரோயினாக நடிக்கிறார். அதாவது ஹிட்லரின் மனைவி ஈவா வேடத்தில் அவர் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிக மிக ஆச்சரியமாக உள்ளது. உலகம் முழுவதும் அறிந்த ஒரு வரலாற்றுப் பாத்திரத்தில் நடிப்பது மிக மிக கடினம். நான் பல்வேறு டிவிடிக்கள், ஆய்வு நூல்கள், வீடியோக்களைப் பார்த்து ஈவா குறித்த ஒரு ஆய்வையே மேற்கொண்டுள்ளேன்.
அனுபம் கெருடன் இணைந்து பல்வேறு கருத்தரங்குகளுக்கும் போகிறேன். அவருடன் போவதால் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஹிட்லரின் கடைசி 10 தினங்களை விவரிக்கும் கதை இது. ஈவாவையும், என்னையும் ஒப்புமைப்படுத்தி நிச்சயம் அலசுவார்கள். அது கொஞ்சம் பதட்டத்தைக் கொடுத்தாலும் கூட என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறேன் என்றார்.
டியர் பிரன்ட் ஹிட்லர் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகிறது. அறிமுக இயக்குநர் ராகேஷ் ரஞ்சன்குமார் இயக்கவுள்ளார். ஹிட்லராக நடிக்கப் போவது பழம்பெரும் நடிகரான அனுபம் கெர்.
உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, தனது வாழ்க்கையின் கடைசி பத்து நாட்களை பெர்லின் நகர பங்கருக்குள் கழித்தார் ஹிட்லர். அந்த பத்து நாட்களும் அவருடன் இருந்தவர் ஈவா. காதலியாக உள்ளே போனவர், பின்னர் பங்கருக்குள்ளேயே வைத்து ஹிட்லரை மணந்து கொண்டார். கல்யாணத்தை முடித்த அடுத்த நாளே ஹிட்லரும், ஈவாவும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.


Click it and Unblock the Notifications











