எங்களை ஏன் காதலில் விழ வைக்கிறீங்க..? த்ரோபேக் போட்டோ பதிவிட்ட நடிகையிடம் கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி, சமையல், ஒர்க் அவுட், நடனம் உள்ளிட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம்
சிலர் தங்களது த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில் பல நடிகைகள் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவதும் வழக்கம். நடிகை நேகா சர்மாவும் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த, டி-சர்ட் சேலஞ்ச் வைரலானது.

சேலன்ச் வீடியோ
அதில், கீழே ஒரு டிசர்ட் கிடக்கிறது. அவர் சுவரில் கால் வைத்தபடி தலைகீழாக நிற்கிறார். பிறகு ஒரு கையால் டிசர்ட்டை பாதி அணிகிறார். பிறகு மற்றொரு கையால் அதை சரி செய்கிறார். இந்த சவாலுக்கு தனது சகோதரியை அழைத்திருந்தார். இதையடுத்து ரகுல் பிரீத் சிங் உட்பட சில நடிகைகள் இந்த சேலஞ்சை செய்தனர்.

கண்டபடி வர்ணிப்பு
இந்நிலையில் இப்போது த்ரோபேக் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செம கிளாமராக இருக்கும் இந்தப் படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக் கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். பல ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் அவரை கண்டபடி வர்ணித்துள்ளனர்.

இன்னும் அழகாக
'இப்படியெல்லாம் டிரெஸ் போட்டு திஷா படானி ஆகப் போறீங்களா?' என்று ஒருவர் கேட்டுள்ளார். இந்த மாதிரி போட்டோவை பதிவு பண்ணி, எங்களை ஏன் காதலில் விழ வைக்கிறீங்க? என்று ஒரு நெட்டிசன் ஏக்கமாகக் கேட்டிருக்கிறார். இன்னொருவர், என்னை பைத்தியமா ஆக்காதீங்க என்றும் இந்த உடைதான் உங்களை இன்னும் அழகாகக் காட்டுகிறது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

கொஞ்சம் அதிகம்
இதே போல இன்னும் நிறைய போட்டோக்களை அப்லோட் பண்ணுங்க. லைக்குக்கும் கமென்ட்டுக்கும் நாங்க இருக்கோம் என்று சில ரசிகர்கள் கூறியுள்ளனர். நீங்க மட்டும் ஏன் இவ்வளவு அழகா இருக்கீங்க? என்று ஒருவர் கேட்க மற்றொருவர், வெயில் கொஞ்சம் அதிகம்தான். அதுக்காக இப்படியா டிரெஸ் போடுவீங்க? என்று கேட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

யங்கிஸ்தான்
நடிகை நேகா சர்மா, தமிழில், பிஜோய் நம்பியார் இயக்கிய அந்தாலஜி படமான, 'சோலோ'வில் நடித்திருந்தார். தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்துள்ளார். இந்தியில் யங்கிஸ்தான், முபாரகன், தன்ஹாஜி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications